உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

241 திட அவை தமை ஏற்றுத் தாலாட்டுகின்றன, தருக்களும் செடிகொடிகளும்! தம்பி! ஓங்கி வளர்ந்திடும் மரங்களும், பலன் பல தரும் தருக்களும் கீழேயும் தான் காண்கிறோம். மலை மேலும்தான் உள்ளன -ஆனால், மகத்தானதோர் வித்யாசம் இருந்திடக் காண்கிறோம். கடிமணம் புரிந்தவன் காதலைச் சொரிந்தும், கன்னல் மொழியை வழங்கியும், இன்ப வாழ்வு நடத்திடுவ தால், எழில் குலுங்கிடக் காட்சி தரும் ஏந்திழையின் முகத் திலே காணப்படும் விளக்கொணாததோர் 'தகத்தகாயம் இந் தத் தருக்களிலும் செடி கொடிகளிலும், புல்பூண்டு, உதிர்ந்து கிடக்கும் சருகுகளிலும் கூடக் காண்கிறேன். இங்கே நாம் எப்போதும் காணும் தருக்களிடம், கடமைத வறாத னின் பராமரிப்பிலே இருக்கும் பாவையரிடம் காணப்படும், பொறுப்பு தெரிகிறது; அங்கு தம்பி! கண்ணாளன் பொழிந்தி டும் காதலால் காரிகை கொண்டிடும் 'பொலிவு' தெரிகிறது இலையில்? மலரில், செடியில், கொடியில்! ! கணவ சிவப்பு, வெளிர் சிவப்பு, நீலம், வெளிர்நீலம், பச்சை, ஊதா, மஞ்சள், பொன் நிறம் தம்பி! வண்ணம் வகைவகையா கக் கொட்டிக் காட்டப்பட்டிருக்கும் ஓர் அற்புதமான ஓவியச் சாலைபோல், அங்கு மலர்கள்? ! மலர்த் தோட்டங்களை அங்கு யாரும் அமைத்திடும் முயற்சியில் ஈடுபட்டில்லை-அவர்கள் காயும் கிழங்கும், கனிவகையும், தேயிலையும், ஏலமும், இவை போன்றவையும் பயிரிட்டுப் பலன்' காணத்தான் பாடு பல படுகிறார்கள். அவர்களின் உழைப்பின் திறம் கண்டு உளம் கனிந்து, புன்னகை பூத்திடும் முகத்தினளாகி. நிலமகள்,அவர் களின் உள்ளத்துக்கு உவகை தர இந்த மலர் சொரிகிறாள் மகிழ்ந்து, என்று கூறவேண்டும் போலிருக்கிறது. உடன் வந்த தோழர்களில் பலருக்கு அந்த மலர்களின் பெயர்களே கூடத் தெரியவில்லை - எனக்குத் தெரியாது என்ற துணிவில் சிலர், மலர்களுக்கு ஏதேதோ பெயர் கூறினர். தேயிலை தோட்டங்களால் பெரும்பொருள் ஈட்டிடும் முத லாளிமார்கள் யாரையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த மாமலைகளைப்பணத்தோட்டங்கள் ஆக்குவதற்காகப்பாடுபட்டு பாடுபட்டு, மேனி கருத்துக்கிடக்கும் தமிழ்ப் பாட்டாளிகளை ஏராளமாகக் கண்டேன். தேயிலைச் செடிகளை அவர்கள் வளர்த்திடும் திறத்தினையும், அதற்கு 'நோய்நொடி' வராமல் பாதுகாத்திடும்வகையினையும் கூறித், தமிழ்த் தொழிலாளர் களின் இரத்தம் இந்தச் 'செல்வம்' விளைவதற்காக எவ்வளவு கொட்டப்பட்டது.என்பதை, என்னிடம், தோட்ட வேலை அனுபவமுள்ள நண்பரொருவர் எடுத்துச் சொன்னபோது தான் எனக்குப் புரட்சிக் கவிஞர்,