உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

247 என்று இடித்துக் கேட்கிறார், காமராசர் இளிக்கிறாரே தவிர, ஒரு பிரச்சினையாகவே கொள்ள மறுக்கிறார். குடகு தனி அமைப்பாக இருத்தல் வேண்டும் - அதைக் கருநாடகத்துடன் இணைத்தல் கூடாது என்று கிளர்ச்சி இருக் கிறது - ஒரு ராஜ்ய முதலமைச்சராயிற்றே என்பதால் இவரி டம் இதுபற்றி முறையிடுகிறார்கள், என்ன பதிலளிக்கிறார் தெரியுமா இந்த நிபுணர்! குடகு தனி அமைப்பாக இருந்தால் என்ன, கருநாடகத்தின் நிர்வாகத்தில் இருந்தால் என்ன, இதற்கு ஏனய்யா தகராறு, இது ஒரு பிரமாதமான பிரச்சி னையா? என்று கேட்கிறார். தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றினைத் தமிழர்கள்பெறப் பாடுபடுவீர்களா? என்று கேட்கிறார்கள் - பதில் என்ன தெரி யுமோ? அதற்கான முயற்சியைச் சென்னை சர்க்கார் கவனித் துக்கொள்கிறது -அதுபற்றி நீங்கள் யாரும் வீணாக மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம்-முயற்சிப்போம்; பெறமுடி யாதுபோனாலும் குடி முழுகிப் போகாது; நாமெல்லாம் 'இந் தியர்கள் தானே, எந்த இடம் -யாரிடத்தில் இருந்தால் என்ன? மைசூர் மைசூர் மக்களுக்கே, என்கிறார்களே அது அவ ருக்குப் பிடிக்கவில்லையாய்! வேங்கடம் முதல் குமரி வரை என்று தமிழர் பேசுகின் றனரே அது அவருக்கு அற்ப விஷயமாகத்தோன்றுகிறதாம்! சென்னை ராஜ்யம் என்ற பெயர் நாடு என்றுதான் இருந்தல்வேண்டும்என்கிறவிஷயம்,சின்ன விஷயமாகி விடுகிறது இந்தப் பெரியவருக்கு! கூடாது, தமிழ் வடநாடு வளருகிறது தெற்கு தேய்கிறதே என்று பொரு ளாதார நிபுணர்களெல்லாம்கூடக் கலக்கமுற்றுப் பேசுகிறார் களல்லவா, அந்தப் பிரச்சினையும் இவருக்குத் தேவையற்ற பிரச்சினையாகத் தெரிகிறது! தொழில்கள் வடக்கே இருந்தால் என்ன, தெற்கே இருந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது என்று மிகமிக அலட்சியமாகப் பேசிவிடு கிறார். அவருக்குப் பாவம், இத்தகைய பிரச்சினைகளில்உண்மை யிலேயே பழக்கம் இல்லை. எனவே அக்கரை எழக் காரணம் இல்லை? இவை போன்ற பிரச்சினைகளைப்பற்றிக் கவனித்தாக வேண்டிய இடத்திலே அவர் அமர்ந்துவிட்டதால், இவரிடம் இவைகளுக்கெல்லாம் விளக்கம், பரிகாரம், கேட்கிறார்கள். அவருக்கோ ஆச்சரியமாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும் இருக்கிறது. அவர் கடந்த முப்பதாண்டுகளாக ஒரேஒரு பிரச் சினையைத்தான் அறிந்திருக்கிறார், இன்றும் அவருக்கு அந்த ஒரே பிரச்சினையிலேதான் அக்கரை இருக்கிறது-மாடு! மாடு!! மாடு!!