உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



28.முருகு, 67-77.

29.சிலப். 14 : 67.

30.சிலப். 15 : 207-16.

31.புறம். 215: 6-7.

32. திருக்குறளின் சிறந்த உரையாசிரியராகிய பரிமேலழகர் 'குடிமை' என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது திருக்குறளுக்குப் பொருள் கூறுமிடத்துப் ‘பழங்குடி' என்னும் சொல்லிற்குச் 'சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்' எனக் கூறியுள்ளார். ஆகையால், பாண்டியர் குலம் இன்ன காலத்தில் தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற இயலாது. தென்னிந்தியத் தலபுராணங்களில் பாண்டியர்கள் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பெறுகிறது. இக் கூற்றுகள் பாண்டிய மன்னர்களுடைய நீண்டகாலத் தொடர்பைக் குறிக்கின்றன. பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சார்ந்தவர்கள் தற்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளனரா? என உறுதியாகக் கூறுவதற்கில்லை. சில வரலாற்றாசிரியர்கள் தென்தமிழ்நாட்டு மறவர் குலத்தைப் பாண்டிய மன்னர்களுடைய சந்ததியார் என்று கூறுவர். மற்றும் சிலர் கள்ளர்கள் இனத்தைச் சார்ந்தவர்களே பாண்டியர்களுடைய சந்ததியார் ஆவர் என உரைப்பர். இப்பொழுது தென்மாவட்டங்களில் வாழும் 'பள்ளர்' இனத்தைச் சேர்ந்தவர்களே பாண்டிய மன்னர்களின் மூதாதையர்கள் என்றும், 'மள்ளர்' என்று சங்க இலக்கியங்களில் காணப்படும் குலப்பெயர் பள்ளர் என்று திரிந்துவிட்டது என்றும் சிலர் கூறுவர். இக்கூற்றில் எவ்வளவு வரலாற்றுண்மை பொதிந்துள்ளது' என்பது அறிஞர்களின் ஆய்விற்கு உரியதாகும். சங்க இலக்கியங்களில் பயன்றுள்ள 'மள்ளர்' என்னும் சொல் பள்ளர் எனத் திரிந்தது என்பதற்கு, இப் பள்ளர்கள் பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. (ப-ர்.) 33.Rock Edicts IIandXIII.

34. இந்நூல் அடிப்படைச் சான்றுகள் II, கல்வெட்டு எண்கள் 1 முதல் 6.

35. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னரது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும்