பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர், துளு நாடு
39
தமிழ்நாட்டைக் கைப்பற்றிய போதே பல்லவ அரசர் தமிழகத்தின் வட பகுதியாகிய தொண்டை நாட்டைக் கைப் பற்றிக் கொண்டனர். ஆகவே, களப்பிரர் ஆட்சி தொண்டைநாட்டில் ஏற்படவில்லை. அவர்களுடைய ஆட்சி தென்பெண்ணை யாற்றுக்குத் தெற்கே சேர, சோழ, பாண்டிய நாடுகளில் இருந்தது.
களப்பிர அரசனுக்குக் கீழ், அவனுக்கு அடங்கிக் களப்பிர குலத்து அரசர் சேர, சோழ, பாண்டிய நாடுகளை யரசாண்டனர் என்பது தெரிகிறது.
மூர்த்தியார்
பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சில காலம் மூர்த்திநாயனார் என்னும் ஒரு வணிகர் அரசாண்டதைப் பெரிய புராணம் கூறுகிறது. மதுரையை ஆண்ட களப்பிர அரசன் பிள்ளைப் பேறு இல்லாமல் இறந்துபோனான். அவன் சைவ சமயத்துக்கு இடை யூறுகளைச் செய்தவன். அவன் இறந்தபோது, அமைச்சர்கள் பட்டத்து யானையின் கண்ணைத் துணியினால் கட்டி மறைத்து நகரத்தில் போகவிட்டனர். அந்த யானை யாரைத் தன்மேற் ஏற்றிக் கொண்டு வருகிறதோ அவரை அரசனாக்கிப் பட்டம் கட்டுவது அக் காலத்து மரபு. நகர வீதிகளில் சென்ற யானை சொக்கநாதர் ஆலயத் தருகில் நின்றுகொண்டிருந்த மூர்த்தியாரைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு சென்றது. அமைச்சர்கள் அவருக்கு முடிசூட்டி அரசனாக்கத் தொடங்கி னார்கள். மூர்த்தியார் தமக்குப் பொன்முடி வேண்டாம் என்று மறுத்து விட்டார். சிவனடியார் ஆகையால், அவர் திருநீற்றையும் உருத்திராக்கத் தையும் சடை முடியையும் அணிந்து பட்டங்கட்டப் பெற்றார். அதனால் அவர் 'மும்மையால் உலகாண்ட மூர்த்தியார்' என்று கூறப்பட்டார். இவருடைய வரலாற்றைப் பெரியபுராணத்தில் (மூர்த்திநாயனார் புராணம்) காணலாம். மூர்த்தியார் எத்தனை யாண்டுகள் அரசாண்டார், அவருக்குப்பிறகு களப்பிரர் ஆட்சி மீண்டும் எப்படி மதுரையில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது நிகழ்ந்த காலமும் தெரியவில்லை.
கூற்றனார்
சோழ நாட்டை யரசாண்ட களப்பிர அரசர்களில் கூற்றனாரும் ஒருவர். இவரைக் கூற்றனார் என்றும் கூற்றுவ நாயனார் என்றுங் கூறுவர். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் (கூற்றுவ நாயனார்