பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
71
9. பூதிவிக்கிரம கேசரி 675-705
10. பராந்தகன் 705-735
11. ஆதித்திய வர்மன் 735-765
இதில் கூறப்படும் ஆட்சி ஆண்டுகளில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் கூடுதல் குறைதலாக இருக்கக்கூடும்.
இதில் கூறப்பட்ட இருக்குவேள்களில் முதல் ஐந்துபேர் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கியிருந்தவர் என்று தெரிகின்றனர். 6,7,8 எண்ணுள்ள அரசர் பல்லவ அரசர்களைச் சார்ந்து அவர்களுக்கு அடங்கியிருந்தனர். 9, 10, 11 எண்ணுள்ள அரசர், அக்காலத்தில் சிற்றரசர் நிலையில் இருந்த சோழர் குலத்தோடு உறவுகொண்டு பல்லவ அரசருக்கு எதிரிகளாக இருந்தனர்.
இங்கு, நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய களப்பிரர் காலத்தில் கொடும்பாளூரை யாண்ட இருக்குவேள் அரசரைப் பற்றிக் கூறுவோம். முதலாமவனாகிய இருக்குவேளின் பெயர் சாசனக் கல்லில் மறைந்து போய்விட்டபடியால், அவனுடைய பெயர் தெரியவில்லை. இவன் களப்பிர அரசனுக்கு அடங்கிக் கொடும்பாளூரை அரசாண்டான். களப்பிரருக்கு அடங்கியிருந்த பாண்டியர், அடிக்கடி மேலெழுந்து களப்பிர அரசனுடன் போர் செய்து சுதந்தரம் பெற முயன்றனர் என்று தெரிகிறது. அவ்வாறு பாண்டியர், களப்பிரரோடு செய்த போர் ஒன்றில், களப்பிரர் சார்பாக இந்த இருக்குவேள் அரசன் பாண்டியனோடு போர் செய்து பாண்டியரின் யானைப்படையை வென்றான் என்று தெரிகிறது. இவனைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.
இவனுக்குப் பிறகு ஆண்ட பரவீரஜித்து என்பவன் பகைவரான வீரர்களைப் போரில் வென்றவன் என்று அவனுடைய பெயரில் தெரிகிறது. அவனுக்குப் பிறகு ஆண்ட வீரதுங்கனும் அவனுக்குப் பிறகு ஆண்ட அதிவீரனும் போரில் வல்லவர்கள் என்பதை அவர்களுடைய பெயரிலிருந்து அறிகிறோம். இவர்களுக்குப் பிறகு அரசாண்டவன் இருக்குவேள் அநுபமன் என்பவன். இவனுக்குச் சங்ககிருத்து (சங்கத்தைச் செய்தவன்) என்று சிறப்புப் பெயர் இருந்தது. இதனால், இவன் சைன சங்கத்தை ஆதரித்தவன் என்று தோன்றுகிறான். மலையத்துவஜன் என்னும் ஜைன முனிவர் தேனிமலைக் குகையில்
1.M.Arokiaswamy, The Early History of the Vellar Basin, 1954, P.61.