உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

குழந்தைச் செல்வம்


கந்தன் முருகனே - ஔவையின்
      கருவம் போக்குதற்கிவ்
விந்தை செய்தானென்று - புலவர்
      விளம்பு கின்றாரம்மா! 10

37. புத்தரும் ஏழைச் சிறுவனும்

[புத்தர் நமது பாரத நாட்டில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறந்த ஞானி. அரச குடும்பத்தில் பிறந்து, சீரும் சிறப்புமாக வாழ்ந்த இவர் உலகவாழ்க்கையை விட்டுத் துறவியானார். அரண்மனையை விட்டு நீங்கிச் சென்ற புத்தர் வழிநடந்த களைப்பால் சோர்ந்து கிடந்தார். அவரைக்கண்ட ஓர் இடைச் சிறுவன், தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தமை பற்றித் தன் கலயத்தில் பால் கறந்து புத்தருக்குக் கொடுக்கத் தயங்கினான். பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டலாகாது என்று புத்தர் அவனுக்குப் போதித்த வரலாறு இதனுள் கூறப்படுகிறது.]

சிறுவன் வழியில் மயங்கிக் கிடந்த புத்தரைக் காணுதல்

ஆடுகள் மேய்த்துவரும் - ஒருவன்
      ஆயர் குலச் சிறுவன்,
வாடிக் கிடந்தவனைச் - செல்லும்
      வழியின் மீதுகண்டான்.

         அவன் செயல்
வையகம் வாழ்ந்திடவே - பிறந்த
      மாதவச் செல்வன் முகம்
வெய்யிலில் வெந்திடாமல் - தழைகள்
      வெட்டி அருகில் நட்டான். 2

தெய்வ குலத்திவனை - எளியேன்
      தீண்டலும் ஆகாதினிச்
செய்வதும் யாதெனவே- சிறிது
      சிந்தை தயங்கி நின்றான். 3