பஞ்சாமிர்தம்
51
எவரும் போற்றிடவே - தமிழில்
இராம கதைபுனைந்தோன்;
புவனம் உள்ளளவும் - அழியாப்
புகழ் பரந்திடு வோன்.
3
மூவர் முடிவேந்தர் - போற்றும்
முத்தமிழ்ப் பாவேந்தன்,
தேவி அருள்பெற்றான் - தமிழ்த்தாய்
செய்தவத் தால்பிறந் தான்.
4
கம்பன் கவிவாழ்க! - இராம
கதை நிதம் வாழ்க!
அம்புவி மீதெங்கள் - அருமை
அமுதத் தமிழ் வாழ்க!
5
45. அமரகவி பாரதியார்
ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்.
அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ்மக்கள் செய்த வத்தால்
தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே
பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே.
46. குதிரைகள் புலம்பல்
கற்றுத் தெளிந்தநல் மானிடரே! - எம்மைக்
காக்கப் பிறந்த பெரியோரே!
சற்றும் அறிவிலா எம் மொழிக்குச் - செவி
சாய்க்கத் திருவுளம் கொள்வீரே!
1