உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 'இந்து' தேசியம்

காஞ்சி மடம் வருணாசிரம தர்மத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்களே? அப்படியென்றால் என்ன?
வருணாசிரமம் என்பது பிறப்பினாலேயே உயர்வு, தாழ்வு உண்டு என்கிற பிராமண தருமம். நமக்குத் தெரியும், வருணாசிரம தருமப்படி, பிராமணர்கள் ஆக உயர்வானவர்கள். அடுத்து வைசியர்கள், அடுத்து சத்திரியர்கள். அப்புறம் சூத்திரர்கள். வருணாசிரமம் தமிழ்நாட்டிலே ஒருபோதும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டது கிடையாது. வருணாசிரமத்தினுடைய ஒட்டுமொத்தப் . பயன் என்னவென்றால் பார்ப்பனர்கள் தங்களை ஆக உயர்சாதியாக' கற்பித்துக் கொண்டு அதன் பயனை அனுபவித்ததுதான். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பார்ப்பனர்தான் ஆக உயர்ந்த சாதியாகக் கருதப்படுகிறார்கள். 1967 வரை, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மூன்று சதவீத மக்கள் தொகையுடைய பிராமணர் பங்கேற்பு இல்லாத ஒரு அமைச்சரவை அமையவில்லை. 1967இல் தமிழ்நாட்டில்தான் அந்தப் புதுமை நடந்தேறியது. (அண்ணா தலைமையில் பதவியேற்ற தமிழக அமைச்சரவை)
'இந்தியர்கள்' என்றால் பிராமணர்களைத்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் விவாதத்திற்கு இடமில்லாமல் 'ஆக உயர்ந்த சாதி' அது ஒன்றுதான்" என்று கற்பிக்கப்பட்டுள்ளது. வருணாசிரமம் என்பது பார்ப்பனருடைய ` பிறப்பை உயர்வாகப் போற்றுகிற கொள்கை. ஏனென்றால் வருணாசிரம தருமப்படி, தமிழ்நாட்டிலே பிராமணர்களுக்கு அடுத்ததாக இருந்த வேளாளர்கள் சூத்திர சாதிக்காரர்கள் அவர்களைவிடச் சத்திரியர்கள் என்று சொல்லக்கூடிய மறவர்களோ வன்னியர்களோ கள்ளர்களோ உயர்ந்த சாதிக்காரர்கள் அல்லர். அவர்களைவிடச் செட்டியார்கள் தாழ்ந்த சாதிக்காரர்கள் அல்லர். எனவே, வருணாசிரமம் பார்ப்பனர்கள் தாங்களாகத் தங்களுடைய மேன்மைக்குக் கற்பித்துக் கொண்ட ஒரு எழுத்து வன்முறையே தவிர நடைமுறையிலே இருந்தது இல்லை. நடைமுறைக்கு வந்ததெல்லாம் பிராமணர்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தாங்களே 'ஆக முதல்சாதி' 'உயர்ந்தவர்கள்' என்ற நிலைமையைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதுதான். இதுதான் வருணாசிரமம். வருணாசிரமம் என்பது பிறப்பு வழிப்பட்டது. ஆகவே வருணாசிரமம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பெயரைச் சொல்லி சுப்பிரமணி என்று நீதிமன்றத்தில் கூப்பிடும் பொழுது அதனாலேதான் சங்கராச்சாரியார் அவருடைய பெற்றோர் இட்ட கூட கையெழுத்துப் போட மறுக்கிறார். 'கைரேகை' வேண்டுமானால் வைக்கிறேன். 'கையெழுத்துப் போட மாட்டேன்' என்று சொல்கிறார். ஏனென்றால் பிறப்புவழிப்பட்ட மேலாண்மை அதிகாரம்தான் இதற்குக் காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/37&oldid=1677649" இலிருந்து மீள்விக்கப்பட்டது