உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.பரமசிவன் 97 1952-இல் பொதுத்தேர்தல் முடிந்து குடியரசுத், தலைவராக, இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கவர்னர் ஜெனரல் ராஜாஜி பதவியிழந்து சென்னைக்கு வந்தார். முதல் பொதுத் தேர்தலாகிய 1952 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை. காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்றிருந்த உழைப்பாளர் கட்சி (வன்னியர் கட்சி) எம்.எல்.ஏக்கள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) பதினோரு பேரைத் தன் கூர்ந்த மதியால் காங்கிரசுக்கு ஆதரவளிக்கச் செய்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். இந்தியாவில் கட்சித் தாவல் நாடகத்தை முதன்முதலாகத் தமிழ்நாட்டில் அரங்கேற்றினார். 1952-இல் முதலமைச்சரானவுடன் அப்பன் தொழிலைப் பிள்ளை செய்யும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் கடுமையாக இதனை எதிர்த்தார். இதனால் கட்சி உறுப்பினர் ஆதரவை இழந்த ராஜாஜி குற்றாலத்திலிருந்த போது காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி சென்னையில் புதிய தலைவராக (முதலமைச்சராக) க் காமராசரைத் தேர்வு செய்தது. 1957 வரை பத்திரிகைகளில் ராமாயண மகாபாரத விளக்கங்கள் எழுதி வந்த ராஜாஜி 1957-இல் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் முதன்முதலில் இந்தியைக் கட்டாயமாக்கிய ராஜாஜி தானே இந்தியை எதிர்க்கத் தொடங்கினார். 'இந்தி வேண்டாம் ஒரு பொழுதும்: ஆங்கிலம் வேண்டும் எப்பொழுதும்' (Hindi Never English ever) என்ற முழக்கத்தை எழுப்பினார். } ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் மொழிவாரி மாநிலங்கள் நேருவின் அரைமனத்தோடு உருவாகிவிட்டன. எனவே, அனைத்திந்திய பார்ப்பனியம் என்னும் இடத்திலிருந்து ராஜாஜி வழுகிப் போவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பார்ப்பனிய நலன்களை இந்தியோ, சமஸ்கிருதமோ பாதுகாக்க இயலாது என்ற நிலை வந்தவுடன், ராஜாஜி ஐரோப்பியப் பார்ப்பன மொழியான ஆங்கிலத்தைப் பற்றிக் கொண்டார். நேருவின் தலைமையில் காங்கிரசின் இடது சார்பைக் கண்டு அஞ்சிய ராஜாஜி தனியுடைமைக் கோரிக்கையினை முன் வைத்து சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். இந்தியாவின் பெரிய முதலாளிகள் அனைவரும். அவரை ஆதரித்தனர். காங்கிரசைப் தன்னைப் பதவியிலிருந்து வெளியேற்றிய பதவியிறக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்தார். 1967 தேர்தலில் காங்கிரசின் வீழ்ச்சிக்கு ராஜாஜி ஒரு காரணமாக அமைந்தார். s://t.me/tamilbooksworld

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/98&oldid=1669783" இலிருந்து மீள்விக்கப்பட்டது