உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.பரமசிவன் 117 இருந்ததால் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் இயக்கம் இந்த மாநாட்டை புறக்கணித்தது. இந்த மாநாட்டில் இந்து மகாசபையின் (Hindu Mahasabha) டாக்டர்.பி.எஸ்.மூஞ்சேவும் இந்து மிதவாதக் கட்சி தலைவர்களான சர்.தேஜ் பகதூர் சாப்௫, ரைட் ஆனரபில் சீனிவாச சாஸ்திரி, எம்.ஆர்.ஜெயகர், தாழ்த்தப்பட்டோர் இயக்கத்தின் சார்பாக டாக்டர் அம்பேத்கார்(தமிழ்நாட்டைச் சேர்ந்த) ராவ் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களைத் தவிர முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் ஆகியோர்களின் சார்பாளர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் முறையாக ஆங்கிலேய அரசால் அழைக்கப்பெற்ற பிரதிநிதிகள் ஆவர். மிகப் பெரிய இயக்கமான காங்கிரஸ் இயக்கம் கலந்து கொள்ளாததால் இம்மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த மாநாட்டில் ‘வகுப்பு வேறுபாட்டு உணர்வுகள் (Communal Difference) கூர்மையாக நிலவியதாக 'இந்து' நாளிதழ் குறிப்பிடுகின்றது. 4 இந்த மாநாட்டைப் பற்றி டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு குறிப்பிடுகிறார், 'தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் இந்துக்களிலிருந்து ஒரு தனிப் பிரிவினராக அங்கீகரிக்கப்பட்டது மட்டுமல்லாது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்படும்போது அவர்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனும் உரிமையைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மாநாடு ஆகும் இந்த மாநாட்டில் அம்பேத்கார் இந்திய தாழ்த்தப்பட்டோரின் நிலைப்பாட்டினை விளக்கும் போது பணிவான் போக்கு முடிந்து எதிர்ப்புணர்ச்சி தொடங்குமிடத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களைக் கொண்ட அரசாங்கம் ஒன்றே எங்களுக்கு அமைய வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.6 இந்த மாநாட்டில் அம்பேத்காரின் செயல்பாடு செயல்பாடு குறித்து இலண்டனிலிருந்து வெளிவந்த 'சண்டே கிரானிக்கல்' என்ற இதழ் டாக்டர் அம்பேத்கார் மனதளவில் ஒரு உண்மையான தேசியவாதி, அவரைத் தங்கள் பக்கம் இழுக்க விரும்பிய பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்து அவர் ஒரு புறம் உறுதியாகப் போர் நிகழ்த்தினார். மறுபுறம் இன்னொரு கடுமையான வேலையும் அவருக்கு இருந்தது. தன்னுடைய சகோதரச் சார்பாளரான ராவ் பகதூர் சீனிவாசனை தேசியத் தளத்துக்கு இழுத்து வருவதுதான் அது' என்று எழுதியது. இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிற்கு முன்னர் 1931 ஜனவரி 21 காந்தியடிகள் சிறையில் இருந்து வெளிவருகிறார். அதே ஆண்டு பிப்ரவரி 17இல் அரசுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/118&oldid=1669806" இலிருந்து மீள்விக்கப்பட்டது