உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

சாகுந்தல நாடகம்

மீன்பிடிக்கிற தூண்டிமுள்ளு,

99

வலை,

ஆடவன் துகளைக் கொண்டு நான் என் குடும்பத்தைக் காப்பாத்தி வருகிறேன் சாமி.

கொத்தவால் : (நகைத்து) உன் தொழில் புனிதமானது

தான்?

ஆடவன் : சாமீ, தலைமுறை தலைமுறையா வருகிற தொழிலு இளிவாயிருந்தாலும் அதை விட்டுடக் கூடாதுங்க. ஒரு படிச்ச பாப்பான் தான் எரக்கமுள்ள வனாயிருந்தாலும், வேள்வி செய்யிறப்பக் கொடுமையான கொலெசெய்யி றானல்லலோ.

கொத்தவால் : நல்லது, பிறகு என்ன?

ஆடவன் : ஒருநாள் ஒரு செவப்புமீனெப் பிடிச்சு அரிஞ்சேன். அப்போ அது வயித்துக்குள்ளே இந்த மணியாளி மின்னிச்சு; அதைக் கண்டு எடுத்துக்கிட்டு வந்துவிக்கக் காட்டினேன்; அப்போ நீங்க பிடிச்சுக்கிட்டிங்க நீங்க என்னைக் காண்ணாலுஞ்சரி, விட்டாலுஞ்சரி; இதுதான் என் கைக்கிது வந்த கை.

கொத்தவால் : ஏ சானுகா! இவன்மேல் பச்சைமீன் நாற்றம் வீசுகிறபடியால், இவன் ஐயமில்லாமல் முதலை தின்கிற செம்படவன்றான். ஆகையால், இவன் கையில் இக் கணையாழி வந்தது ஆராயத்தகுந்ததுதான். நாம் அரண் மனைக்கே போகலாம்.

காவலாளர் : நல்லது, அடே முடிச்சவிக்கிப் பயலே! முன்னே நட.

(எல்லாரும் போகின்றார்கள்)

கொத்தவால் : ஏ சூசகா! இக் கணையாழி அக்கபட்ட வகையைப்பற்றி அரசனுக்குத் தெரிவித்து, அவரது கட்டளை பெற்று நான் திரும்பிவரும் வரையில், வனை இந்த வாயிலிலேயே கருத்தாய்ப் பார்த்துக்கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/130&oldid=1577189" இலிருந்து மீள்விக்கப்பட்டது