உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/தீபாவளிப் பண்டிகை

விக்கிமூலம் இலிருந்து

49. தீபாவளிப் பண்டிகை

 
             தொழிலாளி பாட்டு
பண்டிகை தீபாவளிப் பண்டிகையாம் - இந்தப்
     பாரத நாட்டுக்கோர் பண்டிகையாம்;
தண்டிகை மன்னவர், ஏழை எளியவர்,
     சந்தோஷம் கொண்டாடும் பண்டிகையாம். 1

ஆண்டிலோர் தீபா வளியாம், அடா! - அதை
     ஆண்டியும் கொண்டாட வேண்டும்.அடா!
தீண்டு துயர்போகும் நாள் இதடா!-உள்ளம்
     தேடித் தவித்திடும் நாள் இதடா!

உற்றார் உறவினர் யாவருமே - கூடி
     ஒன்றாக உண்டிடும் நாள் இதடா!
வற்றாத செல்வம் படைத்தவர்போல் -நாம்
     வாழ்வின் நலம்பெறும் நாள் இதடா! 3

வாழத் தயங்கும்இக் காலத்திலே - துளி
     வாழ்வை அளித்திடும் நாள் இதடா!
ஏழைக் கிரங்கி நரகாசுரன் - முன்னம்
     ஈசனை வேண்டிய நாள் இதடா! 4

நல்லெண்ணெய் பூசிக் குளிப்போம், அடா! - நல்ல
     நல்ல உணவுகள் உண்போம்,அடா!
அல்லும் பகலும் உழைப்பதெல்லாம்-வயிறு
     ஆரப் புசிப்பதற் கல்லவோடா! 5

இட்டெலி வீரர்தென் னிந்தியராம் - என்பது
     இன்று நாம் காட்டி விடுவோம்,அடா!
சட்டினி நண்பன் துணையிருக்க - அதில்
     சந்தேகம் உண்டோ? நீ சொல்வாய், அடா! 6

பெண்டுகள் பிள்ளைகள் நெய்த கதருடை
     பீதாம் பரத்தினும் மேலாம், அடா
கொண்டாடிப் பண்டிகை நாளில் அணிந்திடில்
     கோடி கோடிப்புண்யம் உண்டாம். அடா! 6