உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

சாந்தியின் சிகரம்

கறுப்பு முகமூடி போன்று கால் முதல் தலை வரையில் போர்த்தியபடி உருவம் நிற்பதைக் கண்டதும், குடல் நடுங்கிப் போய் தாங்க முடியாத பயத்துடன், “கூ…கூ”வென்று வாய் குழறி, அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான்.

தான் அகப்பட்டுக் கொள்ளாமல் எப்படியாவது ஓடி விட வேண்டுமே என்ற பயத்துடன், கடுமையான பயங்கரம் நிறைந்த த்வனியில் சத்தம் செய்து, டுர்ர்ர்… கர்ர்ர்… என்று கூவிக் கொண்டே கம்பிகள் இல்லாத ஜன்னலால் ஏறிக் குதித்து, அரை நிமிஷத்தில் தன்னறைக்கு ஓடி வந்து, கறுப்புப் போர்வையைத் தன் படுக்கைக்குள் மறைத்து விட்டுச் சடக்கென்று படுத்து விட்டாள்!

ஒவ்வொருவருடைய தனி விடுதிக்கும் இடையில் வெகு தூரம் இருப்பதால், இவன் கூக்குரலையும், குளறலையும் கேட்டு வேலைக்காரன்தான் முதலில் வந்து “என்ன! என்ன!” என்று கேட்டுப் பதறினான். அதே சமயம், கறுப்புப் போர்வையில் மூடப்பட்ட உருவம் கர்ஜித்தபடியே, ஜன்னலால் குதிப்பதைப் பார்த்த இவனும் சேர்ந்து “திருடன்! திருடன் ! பேயோ ! பிசாசோ!”… என்று ப்ரமாதமாய்க் கத்தினான். எல்லோரும் விழித்துக் கொண்டு ஒரே ஒட்டமாய், “என்ன! என்ன விஷயம்? ஒன்றும் புரியவில்லையே?”… என்று கூட்டமாக ஓடி வந்தார்கள். கமலவேணியம்மாளும், வியர்க்க விறுவிறுக்க, “என்னடா தாமோதரா?… என்னடா! என்ன நடந்தது?”… என்று மகனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

இதற்குள் வேலைக்காரர்கள் பங்களா முற்றும் சுற்றிப் பார்த்தனர். எங்கும் போட்ட கதவு போட்டபடியே இருக்கிறது. திருடனாயிருந்தால், எப்படியாவது கதவைத் திறந்து கொண்டோ, கன்னம் வைத்தோ வந்திருக்க வேண்டும். ஏதாவது பொருள் களவு போயிருக்க வேண்டும். சகல சாமான்களும் அப்படியே இருப்பதால் இது நிச்சய-