109
சாந்தியின் சிகரம்
குப் பிறகுதான் தெரியும். அவள் திரும்பி வருவதை என் நண்பன் மூலமறிந்து, நான் ஆகாய விமானத்தில் ஓடி வந்தேன். என் இன்பக் கிளியின் பிணத்தைத்தான் பார்த்தேன். நான் வந்த போது, மாமாவுக்கு உயிர் இருந்தது. இதோ இம்மனிதன் யாரென்றே எனக்குத் தெரியாது. அவருடைய கையில் இஞ்செக்ஷன் ஊசியும், மருந்து புட்டியும் இருந்தது. இப்போதுதான் ஊசி குத்தினேன், தெளிந்து விடும்… என்று சொன்னார். இதற்குள் சகல விவரமும், இந்த ஸ்டோன் துரையாலறிந்து துடித்தேன். மாமா கண்ணைத் திறந்தார்… இதோ! இதோ… இவர் தான் என்று இம்மனிதனைக் காட்டினார்… உடனே டாக்டர் என்று பெரிதாகக் கத்தினார். கொலை…என்று ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள், உயிர் போய் விட்டது. இஞ்செக்ஷன் செய்தது விஷம் என்று துரை கூறுகிறார்.. எனக்கு எந்த தகவலும் விளங்கவில்லை. எனக்குப் போட்டியாக, பாமாவை இவர் மணந்து சொத்துக்களை அபகரிப்பதற்காக முன் ஏற்பாட்டுடன், இத்தனை பேர்களின் உதவியினால் இவர் வந்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது…” என்று மடமடவென்று ஆத்திரத்துடன் வாக்குமூலம் கொடுத்தான்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் “எங்கே இஞ்செக்ஷன் ஊசியும் மருந்தும்…” என்று கேட்டபடியே ஸ்ரீதரனை அணுகினார். இந்த அதிர்ச்சியில், இஞ்செக்ஷன் ஊசி கீழே விழுந்து உடைந்து போயிருந்தது. அதன் பக்கத்தில் இஞ்செக்ஷன் மருந்து புட்டிகளுள் இரண்டும், உருண்டு கிடப்பதைப் போலீஸார் கண்டெடுத்தார்கள்… ஒன்று உயர்ந்த மருந்தும், மற்றொன்று விஷ மருந்து புட்டியுமாயிருப்பதைக் கண்டு, “'ஸார்! இந்த மருந்துகளைத்தானே ஊசி குத்தினீர்கள்?” என்று கடுமையான குரலில் கேட்டார்.
இரண்டு புட்டிகளையும் கண்ட ஸ்ரீதரன் திடுக்கிட்டு நடுங்கியவாறு… “ஐயோ! இது எனக்குத் தெரியவே தெரியாது. இதோ இம்மருந்துதான் நான் செய்தது…” என்று