உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

124

நாட்டி உலகமறியச் செய்ய வேண்டும் என்கிற ஆவேசம் வந்து விட்டதால், கத்துவதும், கதறுவதும் வீராவேசத்துடன் திட்டித் துடிப்பதும் அவனைக் கைது செய்த பாவிகளை நானே கொலை செய்து விடுகிறேன் என்று அதீதமான நிலைமையில் பயித்தியம் பிடித்தவள் போல் இரைவதும், சிறிய மகனிடம் ஓடி, “தாமோதரா! கிளம்பு ! உடனே கிளம்பு! அந்த அதிகார மடையன்களிடம் எல்லாம் போய், உண்மையின் உயர்வைக் கூறி முறையிட்டு, அண்ணாவை அழைத்து வருவோம், வா! வா !” என்று வற்புறுத்தும் படியான நிலைமையில் வந்து விட்டது.

உண்மையில், தன்னுடைய அண்ணனின் உத்தம குணமும், மதிப்பும் தெரியாமல், தனக்கு த்ரோகம் செய்யும் பங்காளி, பகையாளி, தன்னுடைய க்ஷேமத்தையே கருதாத கல் நெஞ்சன் என்றெல்லாம் தவறுதலாகவே எண்ணி, அதற்கேற்ற முறையிலேயே தன் மனோபாவத்தை விரிய விட்டதோடு, அதே இதய உணர்ச்சியுடன் அதே கண்களால், அண்ணனை நோக்கி வந்ததால், இது பர்யந்தம் விரோதியாகவே காணப்பட்டான்.

இன்றய சம்பவத்தின் பயனால், பூகம்பத்தில் ஒரு கட்டிடம் அழிந்து மறைந்து போய் நூதன கட்டிடம் ஒன்று புதுமையாக எழுவது போல், தாமோதரனின் பழைய பகைமையான எண்ணம் அடியோடு மாறிப் போய், அண்ணனின் உண்மை யன்பும், தயாகத்தின் சிறப்பும், அவன் சத்யமான கொள்கை யுடையவன் என்கிற தத்துவமும், நன்றாக மனத்தில் பதிந்து ஊர்ஜிதமாகி விட்டதால், அடியோடு புதிய மனிதனாக மாறிப் போய் விட்டான்! தன்னுடைய கல்யாண விஷயமாய்ப் பெண் பார்க்கப் போனதின் பலனல்லவா, இத்தகைய விதியமைந்தது என்று தனக்குள் எண்ணி, எண்ணி உருகித் தவிக்கிறான். அண்ணனின் தீவிரமான ப்ரம்மசரிய வ்ருத அனுஷ்டானத்தின் உயர்வும், தான் மனத்தை அடக்காது திரிய