உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

138

உங்கள் அன்புக்குரிய டாக்டர் வந்து விடுவார்கள். கடவுளை வேண்டி ப்ரார்த்தனை செய்யுங்கள்” என்று தேறுதல் கூறிச் சென்றான். டாக்டரின் அக்ரமக் கொலைக் குற்றத்தின் அதிர்ச்சியையும் பீறிக் கொண்டு, தாமோதரனின் மாறுதலால் உண்டாகிய ஆச்சரியம், எல்லோரையும் ப்ரமிக்கச் செய்தது. “உலகமிப்படித்தான் விசித்ரங்களைக் காட்டித் தன்னுடைய பெருமையை விளக்கும் போலிருக்கிறது”… என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்கள். பல பேருடைய உள்ளம், பல மாதிரி எண்ணின; ஒரே வியப்புத்தான் எல்லோரையும் கவர்ந்தது.

19

ன்னுடைய முட்டாள் தனத்தையும், தகாத வழியில் நடந்து கொண்டு, காலத்தைக் கடத்தியதையும் எண்ணி, எண்ணி ஏங்கியவாறு வீட்டிற்கு வந்தான். தாயாரின் பரிதாபமும், வீடு உள்ள களையற்ற, அலங்கோல நிலைமையும் பளிச்சென்று தெரிந்து, பின்னும் விசனத்திலாழ்த்தியது. இதுகாறும் இருந்த இரும்பு நெஞ்சம் எப்படியோ மாறிப் போய், பூராவும் இலவம் பஞ்சு நெஞ்சாகிக் கண்ணீரைக் கக்கும்படிச் செய்து விட்ட ஆச்சரியத்தை, அவனாலேயே அடக்க முடியவில்லை. நேரே தன் அண்ணன் விடுதிக்குச் சென்றான். இதுகாறும் அண்ணனிடம், இவ்விடுதியில் நின்று சுமுகமாகப் பேசியறியாத தாமோதரனுக்கு, அவ்விடத்தைப் பார்த்ததும் வெறிச்சென்று தோன்றி, கபீரென்று அலறும்படியாயும், தாளாத துக்கம் பீறிக் கொண்டும் வந்து விட்டது. சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல், ப்ரமை பிடித்தது போல், நின்றான். பிறகு, மேஜை மீதிருந்த டாக்டரின் தினக் குறிப்பு டயரி கண்ணில் பட்டதும், அதை எடுத்துப் பார்க்கலாமா? கூடாதா? என்ற யோசனையுடன் குழம்பினான்.