உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

152

கரமான காட்சியும் தோன்றிவிட்டது! சீ!… இந்த அம்பலவாணனையாவது பேய் வந்து விரட்டவாவது? சுத்த ஹம்பக் நாடகம்” என்று வெகு வெகு தைரியம் செய்து கொண்டு, மறுபடியும் விபூதியை எடுத்துத் தடவிக் கொண்டு பத்ரிகையைப் படிக்கவாரம்பித்தான்.

மறுபடியும் உள்ளே ஏதோ சத்தம் கேட்பதும், வெளிச்சம் தெரிவதும், பேச்சுக் குரல் போலும், ஊளையிடுவது போலும் கேட்டதை உணர்ந்த அம்பலவாணன், உண்மையில் நடுநடுங்கிப் போய், தானே ஊளையிட்டவாறு வெளியில் கேட்டருகில் வந்து விட்டான். சாதாரணமாய் செத்த வீட்டிலேயே சிலர் பயப்படுவார்கள் என்றால், இந்தக் கொலை நடந்த இடத்தில், எப்படி பயம் இல்லாமல் இருக்க முடியும்? “இதென்ன சனியன பிடித்த எழவாகி விட்டது?” என்று தனக்குள் நினைத்தபடியே, கேட்டின் பக்கத்திலேயே சற்று நேரம் நின்றான்.

அப்போது, வாசலில் ரோந்து போகும் கான்ஸ்டெபில் செல்வதைக் கண்ட அம்பலவாணன் தைரியமாய் அவனைக் கூப்பிட்டான். “என்னப்பா! வீதியிலேயே இந்த நேரத்துலே நிக்கிறே?"…என்றான், ரோந்துக்காரன்.

அம்பல:- எத்தகைய பயங்கர விஷயத்திற்கும் அஞ்சாத என் மனசு கூட ஏதோ ஒரு மாதிரி பயந்து நடுங்குதப்பா! கொலை நடந்த ஊடோல்லியோ ?… ஏதோ பேச்சுக் குரல் கேக்குது, ஊளையிட்றது போல் சத்தங் கேக்குது! என்னென்னமோ பயமாயிருக்குதப்பா!… நானும் தைரியமாத்தான் இத்தினி நாளா இருந்துட்டேன். அந்தப் பாவி என் பொஞ்சாதி இருக்காளே ! அவ ஏதோ ஒளறிட்டுப் போனா; அதுலேந்து எனக்கு காபுரா நடுங்குதப்பா! ரவே நீ வந்து பாத்துட்டுப் போயேன். அதுக்குத்தான் கூப்பிட்டேன்…

என்று இவன் கூறி முடிப்பதற்குள், ‘யம்மாடீ! யப்பாடி!’ என்று கத்தியவாறு அந்த ரோந்துக்காரன் ஒரே