181
சாந்தியின் சிகரம்
பினும், தனது தெய்வமாகையால் தூரவிருந்தாவது தரிசிப்பாளல்லவா! உஷாவுக்கும், அவள் தாயாருக்கும் கூட எத்தனை சந்தோஷமாயிருக்கும் என்று தனக்குள் ப்ரமாதமான யோசனையிலாழ்ந்து, தம்பித்து விட்டதால், பதிலே பேசாமல் மவுனியானான்.
இதைக் கண்ட ஜெயிலர், “ஏன் ஸார் இத்தனை கலக்கம்…” என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் சற்று தெளிவு பெற்றவனாய், “ஸார்! மன்னிக்க வேணும்.என் தாயார் மிகவும் பலவீனப்பட்டவள். அவள் என் விஷயத்தில் மிகவும் ஷாக்கடித்து நொந்திருக்கும் சமயம், கம்பிகளின் இடுக்கில் என்னைப் பார்ப்பது என்றால், எங்கே அவளுடைய மனோ வேதனையில் இதயமே நின்று விடுமோ என்று பயப்படுகிறேன். ஆனால், என்னைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவலின் துடிதுடிப்பால், இதயம் பாதிக்கப்படுமோ என்றும் தோன்றுகிறது. அதனால்தான் குழம்பித் தவிக்கிறேன்… சரி… தாங்கள் தயவு கூர்ந்து, என்னை வேறு ஊருக்கு மாற்றி விடுவது உண்மையானால், கடைசி தரமாக என் தாயின் விருப்பப்படிக்கு நான் பார்க்க சம்மதப்படுவதாகவே எழுதி விடுங்கள். கம்பிகளுக்குள் மிருகம் போல், நான் என் தாயாருக்கு காட்சி கொடுக்க வேண்டாமென்று நினைத்தேன். கடவுள் சித்தம்; அதுதான் அவருக்கு த்ருப்தி போலும்!” என்று கூறும் போது, அவனையுமறியாமல் கண்ணீர் முட்டி விட்டது.
ஜெயி:- ஸார் என்னாலாகிய உதவி உங்களை வேறு ஊருக்கு மாற்றுவதுடன், உங்கள் தாயார் உங்களைக் கம்பிகளுக்குள் பார்த்துப் பரிதவிக்காமல், பக்கத்திலேயே இருந்து பார்த்துக் களிக்கும்படிக்குச் செய்கிறேன். சரிதானே? —என்ற போது, ஜெயிலரின் முகத்-