உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

204

புஜம் சொல்கிறார்… ஹல்லோ… எங்கண்ணன் நிரபராதி என்றதை நாயுடு ஒருவரால்தான் விளக்க முடியும் என்று அன்றே நான் சொன்னேன்… மேலே என்ன ஸிஸ்டர்! நாங்கள்தானே… இப்போதே வருகிறோம்… இப்பதான் ஜெயிலில் போய் அண்ணனைப் பார்த்து விட்டு வந்தோம்; சவுக்யமா யிருக்கிறார்… அவரைப் பார்த்தால், ஒரு கைதி என்றோ, சாமான்ய மனிதன் என்றோ நினைக்கவே முடியவில்லை… சரி… இப்போதே வருகிறோம்…”

என்று சந்தோஷச் சிறகடித்துப் பறக்கும் பறவை போல் உஷா, ஒரே பூரிப்புடன்… “சின்னண்ணா! இப்பவே புறப்படுங்கள்… பெரிய அம்மா நீங்களும் வருகிறீர்களா! அம்மா! நீயும் வாம்மா…” என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு, கட்டு மீறிய வாஞ்சையும், ஆத்திரமும் கொண்டு, தானே காரை ஓட்டிக் கொண்டு கிளம்பினாள். “கண்ணூ! பகவந் நாமத்தின் மகிமையைப் பார்த்தாயா! நாமம் ஒன்றே நமக்குத் துணை என்று எண்ணித் தீர்மானித்த உடனேயே, எத்தகைய நல்ல செய்தி கிடைத்தது பாரு. நினைத்த மாத்திரம், இத்தகைய நன்மையைச் செய்யும் என்னப்பன் கருணாமூர்த்தியை நம்பி, பஜித்தால் கை விடவே மாட்டான்” என்று மறுபடியும் சுந்தராம்பாள் சொல்லிய போது, அந்த உணர்ச்சி உஷாவின் இதயத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது.

27

ஸ்ரீதரன் மனத்தில் ஒரு புத்துணர்ச்சி எப்படியோ குடி கொண்டு, இதயத்தை நிரப்பிக் கொந்தளித்துத் தளும்புகிறது. இதற்கு என்ன காரணம் இருக்கும் என்று அவனாலேயே நம்ப முடியவில்லை. இனி கண்ணால் பார்க்கவே மாட்டோம் என்று எண்ணி கை விட்டு