உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259

சாந்தியின் சிகரம்

இத்தனைப் புகழும் அழிந்து போய், என் மனைவி, என் மக்கள், அவர்களுக்கே சொத்து சேர்க்க வேண்டும். அவர்களுக்கே உழைக்க வேண்டும் என்கிற போக்கில், என் புத்தி மாறி விடும்! இத்தனை அனாதைகளின் கதி என்னவாகும். இந்த ப்ரம்மச்சரிய அனுஷ்டானத்தின் மூலந்தான் உலகமே இன்று கொண்டாடி மகிழ்ந்து போற்றும், விவேகாநந்தர், ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், மகாத்மா காந்தியடிகள்… இன்னும் எத்தனையோ சிறந்த மேதைகளாக விளங்குகிறார்கள்; அவர்களில் மகாத்மாவும், ராமக்ருஷ்ணரும் மணவாழ்க்கையை மேற்கொண்டும், உண்மைத் துறவிகளாய், த்யாகிகளாய் வாழ்ந்தார்கள். அம்மாதிரி, நானும் ஒரு பெண்ணை மேலுக்காக மணந்து கொண்டு, அவளையும் வருத்தி, அவள் கவலையைக் கண்டு நானும் கலங்கி, இரண்டாங்கெட்டான் வாழ்க்கை வாழ வேண்டுமென்கிறாயா? அம்மா! மணவாழ்க்கையினால் என் பிதாவின் கதி, அடுத்த வீதியிலிருக்கும் அம்பலவாணனின் கதி, டாக்டர் தணிகாசலத்தின் கதி இப்படியே சொல்லிக் கொண்டு போனால், வருஷக் கணக்கில் சொல்லலாம். நம் ஸந்ததி விளங்குவதற்குத் தம்பி இருக்கிறான். இதோடு என்னை விட்டுவிடம்மா! என்னுடைய சக்தியும், என்னுடைய கீர்த்தியும் தினே,தினே புது மெருகிட்டு, மணக்க வேண்டுமாயின், இந்த அல்பத் திருமண ஆசையை விட்டு விடு. அம்மா! ஏனம்மா இப்படிப் புலம்புகிறாய்! ஐயோ, என்னுடைய லக்ஷ்யத்திற்கு வெற்றியைக் கொடுக்க நீ ஸம்மதிக்க மாட்டாயா?

கமல :- செல்வா! உன் புகழ் உச்சஸ்தாயியில் ஆனந்தமாய்ப் பாடி ஆடுகிறது என்பது நானறிவேன். உலகத்தில் தம்பதிகளாய் வாழ்ந்து புகழ் பெறுவதுதான் உயர்வே அன்றி, ஒண்டிக்கட்டை வாழ்வு