உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 தமிழில், மஞ்சரி என்ற ஒரு டைஜஸ்ட்டைக் கலைமகள் அலுவலகத்தார் வெளியிடுவதையும் இங்கே குறிப்பிடலாம்.. டி விட் வாலேஸ் (De Witt Wallace) என்பவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையை உருவாக்கினார். மாதந்தோறும் இப் பத்திரிகை வெளி வருவதால், ஒரு நாளைக்கு ஒரு கட்டுரை வீதம் 31 கட் டுரைகளை ஒவ்வோர் இதழிலும் சேர்க்கிறார்கள். கோட்டும் பையில் பொருந்தக்கூடிய அளவில் வெளிவருவது) குறிப்பிடத் தக்கவை. இப்பத்திரிகையின் அலுவலகத்தில் வேலை செய்பவர். களுக்கு ஓய்வுச் சம்பளமும், வைத்தியச் செலவுக்கும் ஆயுள் பாதுகாப்புப் பத்திரம் வாங்குவதற்கும் சிறு தொகைகளும்.. ஓராண்டுக்கு ஒரு மாத ஓய்வும் கொடுக்கப்படுகின்றன. இப்பத்திரிகைக்குச் சிறு துணுக்குகள் அனுப்புகிறவர் களுக்கும், மற்றப் பத்திரிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை அனுப்புகிறவர்களுக்கும் சன்மானம் கொடுக்கப் படுகிறது. நாளொன்றுக்கு 6 லட்சம் பிரதிகளைப் பத்து நிறங் களுடன் அச்சிடும் இயந்திரமும் இப்பத்திரிகைக்குச் சொந்தமாக இருக்கிறது. குருடர்களுக்கான ஒரு பதிப்பை ஒலிப்பதிவுத் தட்டுகளாக இப்பத்திரிகையாளர் வெளியீடு கிறார்கள். இதைக் கேட்டுக் குருடர்களும் ரீடர்ஸ் டைஜஸ்டைப் பயன்படுத்துகின்றனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறும் மாணவர் ஒவ்வொருவருக்கும் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் ஒன்றை அன்பளிப்பாக வழங்குகிறார்கள். அமெரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பதவி பெறுவதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண் டுள்ளனர்; வாதத்துக்குரிய விஷயங்களைப்பற்றிய இரு கட்சிகளும் இப்பத்திரிகையில் இடம் பெறுகின்றன.