உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 201 இலக்கியத்தில் ஊறிய பழைய மனம் கொண்டவர்களைவிட, இவர்களே வ்வகையில் நல்லவர்களாக உள்ளனர் எனலாம். சிலப்பதிகாரத்தைக் கற்றவர்கள் அடுத்து வரும் புதிய காவியங்களில், காவியத் தலைவி உயர்ந்தவளாகவும் தலைவன் குறையுள்ளவனாகவும் இருத்தல் வேண்டும் என்று பழைய மரபாக அதை வற்புறுத்துவார்களானால், அது பொருந்துமோ? மணிமேகலை கற்றவர்கள், காவியத்தில் தலைவி திருமணம் ஆகாமல் துறவி ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார்களானால், அது எள்ளி நகையாடத் தக்கது ஆகும் அன்றோ? அதுபோலவே, பழைய இலக்கி யங்களின் மரபுகளையே புதிய படைப்புக்களின் அளவுகருவி யாகக் கொள்ளுதல் பொருந்தாது என்று உணர்தல் வேண்டும். வளர்ச்சி விதிகள் வரையறுக்கும் தன்மை உடையன. வரை யறை, வளர்ச்சியற்ற, உயிரற்ற பொருள்கட்கே பொருந்தும். இலக்கியம், உயிரினங்களைப்போல் தோற்றமும் வளர்ச்சியும் வாழ்வும் உடையது. ஆகவே, இவ்வாறுதான் இருத்தல் வேண்டும் என்று வரையறை செய்வது இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பொருந்தாத தடையாகும். தொடக்கத்திலிருந்து வளர்ந்து மாறிவரும் இலக்கியம், இனியும் அவ்வாறே வளர்ச்சி பெறக் கூடியது என்று மதித்துப் போற்றுவதே கடமையாகும். We should not invoke the classics to check originality, hamper experiment or define in advance the lines which the literature of our own time should or should not follow. We should not try to make systems and rules out of them. 7 W.H.Hudson, An Introduction to the Study of Literature, p. 312.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/205&oldid=1681887" இலிருந்து மீள்விக்கப்பட்டது