________________
140 இலக்கிய மரபு பண்டைக் காலம் முதல் வளர்ந்துவந்துள்ள பாட்டுக் கலை பல துறைக்கும் உதவுவது போல், நாவல் பல துறைக் கும் உதவுமா என்பது ஐயமே. ஆயினும் பாட்டுக் கலை பயன்பட்ட துறைகளில் பெரும்பாலானவற்றிற்கு நாவல் என்னும் கலையும் பயன்படும் என்று கூறலாம்:* பாட்டுக் கலை போலவே, நாவலும் பயன்படுவதால்தான், பாட்டு இயற்ற வல்ல புலவர் பலர், நாவல் எழுதும் துறையை மேற்கொண்டுள்ளனர். இதை ஆங்கில இலக்கியத்தில் தெளிவாகக் காண்கிறோம். மெரிடித் என்னும் ஆங்கிலக் கவிஞர் பல் பாட்டுக்கள் எழுதிக் கவிஞர் என்னும் புகழ் பெற்றதோடு, நாவலும் பல எழுதியுள்ளார். அவ ருடைய நாவல்கள், உரைநடையில் இயன்ற விரிவான பாட்டுக்கள் என்று ஒருவர் குறிப்பிடலானார். சில நாவல்கள் தன்னுணர்ச்சிப் பாட்டுக்கள் போல் அமைந்துள்ளன என் றும் கூறுவர். ஸ்காட் என்ற நாவலாசிரியர் தம் நாற்பதாம் ஆண்டு வரையில் ஒரு நாவலும் எழுதியதில்லையாம்.
- Possibly it may not be true to say that prose fiction can do all that poetry can do; it is sufficient for my purposes if we admit that it can do most of the things that poetry can do, and if we remember that prose fiction is still very young. But I want, if I can, to persuade you to conceive it as a medium analogous to the medium of poetry. .......... The forms of literature change, but not the form of creative literary genius. -J. M. Murry, The Problem of Style, p. 70. Meredith was a highly complicated man, but before everything else he was a poet, a magnificent drunkard of words, and it may be that as a poet his name will survive. His novels are elaborate poems in prose, carrying back to the Elizabethan days, and the work of John Lyly ; and carrying forward to a whole school of writers of our time, who, with a further direction from the exquisite experimentalist Virginia Woolf,now use the novel as a vehicle for subjective lyrical self-expression, haunted by characters who float half-embodied, between the ground of actuality and sky of idea.
-Richard Church, The Growth of the English Novel, p. 186.