உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாகுபாடு 45 நீதிநூலில் அவற்றைக் காண்பது அரிது. ஆதலின் ஆசாரக் கோவை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது முதலியன இலக்கியம் என்று கூறத் தக்கன அல்ல; நீ நீதி களையே கூறினும், கூறும் முறையில் உணர்ச்சியும் கற்பனை யும் இயைந்திருப்பின் அவை இலக்கியம் என்னும் சிறப் யினைப் பெற்றுவிடும். * நாலடியாரில் பல பாட்டுக்கள் அவ்வாறு அமைந்திருத்தல் காணலாம். ஆசாரக்கோவை முதலியவற்றின் ஆசிரியர்கள் அறம் உரைப்போராக உள்ளனரே அன்றிக் கலைஞராக விளங்க வில்லை; நாலடியாரில், கலைஞராக இருந்து அறம் உரைத்த லால் அந்தக் குறை இல்லாமற் போகிறது. ஆகவே, சில பாட்டுக்கள் அறம் உணர்த்தும் காரணத் தால் கலைச் சிறப்பினின்றும் தாழ்வுறவில்லை; அறம் உணர்த்துவதோடு, உணர்ச்சியும் கற்பனையும் சேர்ந்து அமையாததே குறையாகும். புலவர், கலைஞராய்க் கற் பனை யுணர்ச்சி கொண்டு பாடாமல், அறவுரையாளராக மட் டும் நின்று உபதேசம்' செய்வதால்தான், அக் குறை நேர் கின்றது. அதுவும் சிறந்த இலக்கியமா என்று காணும் போது புலப்படும் குறையே அல்லாமல், அறத்தின் சிறப் புக்குக் குறையாகாது. அறத்தை எடுத்துரைத்தலே முதன் மையான நோக்கமாகக் கொண்டு பாடப்படும் பாட்டுக்கள், பாட்டின் தன்மையைப் பெற்றிருப்பினும், உயர்ந்த

  • Poetry may teach, then, if it teaches in art's way ... "To instruct delightfully," says Dryden, “is the general end of all poetry."

-J. L. Lowes, Convention and Revolt in Poetry, p. 215. † We rate low certain didactic poetry, but that is not because it is didactic, but because it is hot poetry, because the poet made himself preacher or a pedagogue, instead of an inspired sitiger/ -S. J. Brown, The Realm of Poetry, p. 120.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/49&oldid=1681970" இலிருந்து மீள்விக்கப்பட்டது