இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் அடைந்ததற்கும் முதற்காரணமான இங்கிலாந்தின் கடற்படை வன்மைக்கு ஒரு சின்னமுமாகும். அட்லாண்டிக் பெருங் கடலின் இரு கரைக ளிலும் உள்ள ஆங்கிலம் பேசும் நாடுகளாகிய இங்கிலாந்து, அமெரிக்கா இரண்டையும் இணைக் கும் உறவுகளில் குயின் எலிசபத் மிகச் சிறந்த தொன்றாகும்.கடலை வெல்ல மக்கள் கொண்டுள்ள உறுதிக்கு எடுத்துக்காட்டாக இக் கப்பல் மிளிர் கின்றது. கப்பல் கட்டுவதில் ஆங்கிலேயரின் மேன் மைக்கும் குயின் எலிசபத் தக்க சான்றாகும். தம் அரச குடும்பத்தாரிடம் ஆங்கிலேய மக்களுக்கு உள்ள உண்மையான அன்புக்கும் இக் கப்பலின் பெயர் ஓர் அடையாளமாக விளங்குகின்றது.