உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நகரத்தார்களைப் பற்றி விரிவான ஆதாரமான நூல்கள் முழுமையாக இன்னும் வெளி வந்தில. தமிழ்ப் பணிகளைப் பற்றி இந்நூலாசிரியார் எழுதிய

  • செட்டிநாடும் தமிழும்' என்ற நூலும், இந்தியாவில்

இவர்கள் செய்துள்ள அறப்பணிகளைப் பற்றி,(மேயர்) ஆர். இராமநாதன் செட்டியார் அவர்கள் வெளியிட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு என்ற நூலும் வந்திருக்கின்றன. நாயக்கர் விஜயநகர ஆட்சிக் காலத்தில் ரெட்டியார்கள். ராஜாக்கள், தெலுங்குப் பிராமணர் முதலிய சில இனத் தவர் ஆந்திர நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறி னர். இவ்வாறு தமிழ் நாட்டிற்கு வந்தவர்களுள் கம்மவர் நாயுடுக்களும், கம்பளத்து நாயுடுக்களும் பிற நாயுடு இனத்தவரும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுக்கு நாயக்கர் என்றும் பெயருண்டு. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது இராம நாதபுர மாவட்டத்து ஸ்ரீ வில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை வட்டங்களில் கம்மவர் நாயுடுகள் பெரிய அளவில் குடியேறினர். இவர்கள் அரசாங்க அலுவல ராகவும் போர் வீரர்களாயும் அமர்ந்து செல்வாக்குடன் இருந்தனர். சில இடங்களில் இவர்கள் நாயக்க மன்னர் களின் பிரதிநிதியாகவும் விளங்கினர். புதிதாக இவர் கள் உண்டாக்கிய ஊர்கள், அந்தக் குடியேற்றத்திற்குக் காரணமான நாயக்கர் தலைவரின் பெயரைப் பெற் றுள்ளன. இம்மாவட்டத்தில் இவ்வாறு குறிப்பிடத் தக்கன : கல்லம நாயக்கன் பட்டி, அப்பய நாயக்கன் பட்டி, முத்தால நாயக்கர்பட்டி, காமய நாயக்கன்பட்டி, வெங்காள நாயக்கர் பட்டி, போ நாயக்கன் பட்டி