124 முதுகுளத்தூர் கலகங்களுக்குப் பின்னர் ஏற்பட்டது. கீழக்கரை வரை 60 அருப்புக்கோட்டையிலிருந்து மைலுக்கும் மானா மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை 75 மைலுக்கும் இரயில் பாதை போட வேண்டுமென்று 1958 இல் தமிழக ஆளுனர் இந்திய இரயில்வே அமைச் சுக்கு எழுதியுள்ளார். கடலோரப் பகுதி தவிர ஏனைய பகுதிகள் பருத்தி வேளாண்மைக்கு ஏற்றவை என்றும் கடற்கரைப் பகுதிகளில் இரசாயனத் தொழிற்சாலைகள் தொடங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடித் துறைமுகம் வழியாக கருப்புக் கட்டியை யும் கருவாட்டையும் இலங்கைக்கு அனுப்பவும் தாளை யூத்து, துலுக்கப்பட்டி சிமெண்டு ஆலைகளுக்கு சுண் ணாம்புக்கல் அனுப்பவும் இந்த இரயில் பாதை பயன் படும். மானா மதுரை - தூத்துக்குடிப் பாதையைக் கமுதி விளாத்திகுளம் வழியாகப் போட +931-இல் அப் போதைய 'சவுத் இந்தியன் ரயில்வே கம்பெனி' திட்ட மிட்டது.1955-இல் இந்திய அரசினர் அத்திட்டத்தை நிறைவேற்ற விரும்பினர். மானா மதுரை - விருதுநகர் இரயில் பாதை போடுவது அதைவிட அவசரம் என்று கருதி, இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்தியா -- இலங்கை இரயில் தொடர்பு: தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் நடைபெற்ற கப்பல் போக்குவரத்து மட்டுமே சென்ற நூற்றாண்டில் இந்தியாவையும் இலங்கையையும் தொடர்புபடுத்திற்று. நாள்தோறும் வந்த இக்கப்பலில் இலங்கையிலிருந்து இந்தியத் தபால்கள் வந்தன. இந்தக் கப்பலை எதிர் பார்த்து தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் புறப்படுவதாக இருந் தது. இக்காரணத்தால் இன்றும் நெல்லை மாவட்டத்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/126
Appearance