145 சொந்தமான புனலூர்க்காகித ஆலையிலிருந்து அட்டை வரவழைத்து, இங்கே குழாய் செய்கிறார்கள். மிகக் குறைந்த எண் நூல்களைக் கொண்டு காடாத் துணி செய்தும் ஜமக்காளம் முதலிய பொருள் களை உற்பத்தி செய்பவர்களுக்கு ஏற்ற நூல் நூற்றும் சில சிறு ஆலைகள் நடைபெறுகின்றன. கழிவுப் பஞ்சு, கோணிச் சாக்குகளிலுள்ள கழிவுப் பொருள்கள், சென்னா இலைகள் ஆகியவற்றை பேலாக்கி ஏற்றுமதி செய்யும் 'காட்டன் பிரசிங் பாக்டரிகளு ம் இம்மாவட்டத்தில் இருக்கின்றன. சிமெண்டு ஆலைகள் சிமெண்டு உற்பத்திக்கு வேண்டிய மூலப் பொருள் கள் இம்மாவட்டத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் சிமெண்ட் ஆலை மெட்ராஸ் சிமெண்ட்ஸ்' என்பது. இதன் அலுவலகம் இராஜபாளையத்திலும் தொழிற் சாலை சாத்தூருக்கு அருகேயுள்ள துலுக்கப்பட்டியிலும் உள்ளன. 1961இல் இங்கு உற்பத்தி தொடங்கிற்று நாள் தோறும் உற் பத்தி அளவு 600 டன். இக்கம்பெனியில் தமிழக அரசுக்கும் ஓரளவு பங்கு இருந்து வருகிறது. இந்த ஆவை ஏற்பட்ட பிறகு இராமநாதபுர மாவட்டத்தில் சிமெண்டு செய்வதற்குத் தேவைப்படும் மூலப் பொருள்கள் இருப்பதை ஆராயும் வேலை விரிவாக நடந்தது. மண்டபம் பகுதியிலும் ராமேசுவரம் தீவிலும் அள்ள முடியாத அளவுக்குச் சுண்ணாம்புக் கல் முதலியன குவிந்து கிடக்கின்றன. இதைப் பயன்படுத் துவதென்றும் மானாமதுரை அருகே சிமெண்ட் ஆலை யைப் பெரிய அளவில் அமைப்பதென்றும் தமிழகத்தின்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/147
Appearance