உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இங்கு அச்சிடப் பெறுகின்றன. அச்சு இயந்திரங்கள் மேலை நாட்டிலிருந்து வரவழைக்கப் பெறுகின்றன. இந்தத் தொழிலின் தந்தை திரு. அருணகிரி ஆவார். இத்தொழிலை ஒட்டிச் சித்திரக்கலை பெரிதும் வளர்ந் திருக்கிறது. பெரிய அளவில் வார்னிஷ் பூசும் பாலிகிராப் ஆப்செட் அச்சக்த்தைத் தமிழக அரசு சிவகாசியில் நிறுவியுள்ளது. அச்சு வார்ப்புத் தொழில்: சிவகாசியிலும் திருத்தங்கலிலும் பவுண்டரித் தொழில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. திருத்தங்கல் காகா இந்தியன் பவுண்டரியில் அச்சு ஆலைகளுக்கும் நூல் ஆலைகளுக்கும் வேண்டிய கருவிகளும் வேளாண் மைத் தொழிலுக்கு இரும்பு உருக்குப் பொருள்களும் பலவகை ஆட்டங்களுக்குரிய விளையாட்டுக் கருவிகளும் செய்யப்படுகின்றன. சிவகாசி 'மாடர்ன் இண்டஸ்ட்ரீஸ் மேகசின்' என்ற தொழிற் சாலையில் வார்னிஷ், டிஸ்டம்பர், லப்பம், பிரஞ்ச் பாலிஷ் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. புதிய தொழில்களுக்கு வசதிகள்: இம்மாவட்டத்தின் 1971 முதல் தி.மு.க. அரசு தொழில் வளர்ச்சியில் கருத்துச் செலுத்தத் தொடங்கி யிருக்கிறது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த திரு மாதவன் தொழில் அமைச்சராய் உள்ளார். பல வட்டங்கள் பிற்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன. எனவே இங்கு அமையும் தொழிற் சாலைகளுக்கு மூல தனத்தில் இந்திய அரசிடமிருந்து பத்து சதம் மானிய