174 முன்னரே தமிழகம் பெற்றெடுத்த புகழ்மங்கையே ராணி வேலுநாச்சியார். அடிக்கடி சிவகங்கைச் சீமைக்கு ஆர்க்காடு நவாப் தொல்லை கொடுத்தான். ஓயாமல் கிஸ்தி கேட்டவண்ண மாக இருந்தான். 1783-இல் கிழக்கிந்திய கம்பெனியாரி டம் சொல்லி சிவகங்கைச் சீமையை அழிக்க புல்லாட்டனை படையெடுக்கச் செய்தான். இவ்வாறு இடையிடையே பல குழப்பங்கள் நடைபெற்றன. பாஞ்சாலங்குறிச்சி யின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து வெளியேறிய ஊமைத் துரை சிவகங்கைச் சீமையில் அடைக்கலம் புகுந்த செய்தியை அறிந்த சீமைத்துரைகள் 1801இல் கமுதிக் கோட்டையில் கடும்போர் தொடங்கினர். பின்னர் அந்தப்போர் திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பார்த் திபனூர், பரமக்குடி, நத்தம், ஒக்கூர், சிறுவயல் முதலிய இடங்களுக்கெல்லாம் பரவியது. அந்த விடுதலை உணர்ச்சி இன்றும் இம்மாவட்டத்தில் குன்றவில்லை. கட்டப்பொம்மு: "வானம் பொழியுது பூமிவிளையுது கும்பினிக்கேது வரிப்பணம்?” என்று கட்டபொம்மு பதில் சொல்லியது; இராமநாத புரத்து மண்ணில். இராமநாதபுரத்தில் சேதுபதிக்குச் சொந்தமான 'இராமலிங்க விலாசம்' என்னும் மாளிகையில் கலெக்டர் ஜாக்ஸனைக் கட்டபொம்மு சந்தித்தபோது, அந்தக் கலெக்டர் 'உம்மைச் சிறை செய்திருக்கிறேன். இது கும்பினியாரின் உத்திரவு' என்று சொன்னான். கட்ட பொம்முவோ தம் உடைவாளை உருவி வீசி, அங்கிருந்து படைவீரர் சிலரை வெட்டித்தள்ளிக் கலெக்டர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/176
Appearance