உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 மியூசிக் அகடமியைத் தொடங்கி வைத்தார். இவர் கஞ்சிரா வாசிப்பதில் சிறந்து விளங்கினார். தேவ கோட்டை ஜமீன் தாராக இருந்த அருணாசலம் செட்டி யார் 'சுரகத்து' என்ற இசைக் கருவி வாசிப்பதில் சிறந்து விளங்கினார்; காளையார் கோவிலில் இசைப் புலவர் பலரை அடிக்கடி அழைத்து இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தார். புலவர்கள் கவிக்குஞ்சரபாரதியார் இம்மாவட்டத்துப் பெருங் கரையினர்; இவர் அழகர் குறவஞ்சி போன்ற இசை நூல்களை ஆக்கியுள்ளார்; வற்றாயிருப்பு கருப்பண்ணத் தேவர் (1874-1961) பிடில் வித்துவானாகவும் வாய்ப்பாட்டு வல்லுநராயும் விளங்கினார். கலையை விற்கலாகாது' என்று கருதி, இவர் இசைத்தட்டுகளுக்குப் பாட மறுத்தது குறிப் பிடத்தக்கது. இவருடைய மாணவர் பலர் வானொலி நிலையங்களில் பணிபுரிந்தும் பிற வகைகளில் கலை வளர்த்தும் வருகின்றனர். இராமநாதபுரம் சீனிவாச ஐயங்கார் என்ற பூச்சி ஐயங்கார் சிறந்த வாய்ப்பாட்டுப் புலவராகவும் இராம நாதபுரம் சமஸ்தான வித்துவானாகவும் விளங்கினார். இவரிடமே அரியக்குடி இராமாநுஜ ஐயங்கார் பயிற்சி பெற்றார் இந்நூற்றாண்டில் அரியக்குடி, இசைத்துறையில் பெரும் புலமை பெற்று, காரைக்குடி அருகேயுள்ள தம் சிற்றூருக்கும் இம்மாவட்டத்துக்கும் பெருமை தந்தார். இவருடைய வரலாறு நூலாக வெளி வந்திருக்கிறது. மழவராயனேந்தல் என்னும் சிற்றூர் இசைப் புலவர்களை ஈந்திருக்கிறது. திருவிளையாடல் புராணத்