300 கத்தோலிக்க மாதா கோவில் ஒன்றுண்டு. அதற்குக் கோவில் என்று பெயர் கிட்டோரியம்மன் உண்டு. மாதா 8. தலையாரித் தீவு: கீழக்கரைக்குத் தென் கிழக்கே 16.கி.மீ.தொலைவிலுள்ளது. இங்கும் சுண்ணாம்புக்கல் பாறைகள் உள்ளன. 9. அப்பாத் தீவு: கீழக்கரையிலிருந்து 8.கி.மீ. தொலைவு.பவளப் பாறைகள் இங்கு உண்டு. மனிதர்கள் இங்கு வசிப்பதில்லை. 10. பூவரசன் ஹள்ளித் தீவு: கீழக்கரையிருந்து 9கி.மீ. தொலைவு. பூவரசன் மரங்கள் நிறைந்தது. 1 பிள்ளையார் முனைத் தீவு: பூவரசன் ஹள்ளித் தீவுக்கு அருகே உளது. இதற்குப் பாலயாமுனைத் தீவு என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு மனிதர் குடியிருப்பு இல்லை. 160200. 12. ஆனைப்பாறைத் தீவு: பிள்ளையார் முனைத் தீவுக்கு இரண்டு மைல் தொலைவிலுள்ளது. இது பாறைகள் மிகுந்த தீவு. 13. நல்ல தண்ணீர்த் தீவு: வாலி நோக்கத்தி லிருந்து ஐந்து மைல் தொலைவு. இத்தீவில் இடுப்பளவு தோண்டினாலே நல்ல குடி தண்ணீர் கிடைக்கிறது. சவுக் குத் தோப்புக்கள் இங்கு அதிகம். 14. களித் தீவு: நல்ல தண்ணீர்த்தீவிலிருந்து 3.கி.மீ. தொலைவிலுள்ளது. மணற் பாங்கானது. பொட்டல் வெளிதான். 15. உப்புத் தண்ணீர்த் தீவு; சுளித்தீவிலிருந்து இரண்டேகால் மைல் தொவிலுள்ளது. இங்கு கிடைக் கும் ஊற்று நீர் உப்புக்கரிப்பதால் உப்புத் தண்ணீர்த் தீவு என்று பெயர் பெற்றது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/302
Appearance