12. பொறியியல் அறிஞர்கள் உதவியுடன் 18 - ஆம் நூற் 18-ஆம் றாண்டு தொடக்கத்தில் கட்டியதாகக் கூறுவார்கள். சிலர் இதை பாண்டியர்கள் கட்டியதாகச் சொல்லுகிறார் கள். 1801-இல் கிழக்கிந்தியக் கம்பெனியர் இக்கோட் டையைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். பிறகு மருது பாண்டியர்கள் படை இதைக் கைப்பற்றியது. கட்டபொம்மனும் இக்கோட்டையை பயன்படுத்திக் கொண்டான். இக்கோட்டை இப்போது பாழடைந்த நிலையிலிருக்கிறது. கோட்டையில் மேல் விளிம்பிலிருந்து பார்த்தால் மசூதியும் குண்டாறும் தெரியும்.-1957-இல் கலகங்களை அடக்க இங்குதான் படை வகுக்கப் பெற் றிருந்தது. 1877-லும் 1925-லும் 1956-லும் வெள்ளத் தால் இவ்வூர் பெரிதும் சேதப்பட்டது. கிறித்தவர்கள், முஸ்லிம்கள், நாடார்கள்,மறவர் கள் ஆகியோர் இங்கு உள்ளனர். இங்குள்ள மீனாட்சி யம்மன் கோவில் சுந்தர பாண்டியன் கட்டியதென்றும் பிற்காலத்தில் சேதுபதிகள் அதைப் புதிப்பித்தார் களென்றும் கூறப்படுகிறது. இக்கோவிலுக்குள் சென்று வழிபட 1898-99-இல் சாணார்கள் விரும்பினர். அதை யொட்டி கலகங்களும் வழக்குகளும் நடந்தன. அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் 1888-இல் முஸ்லிம்களுக்கும் நாடார்களுக்குமிடையே கலகம் ஏற்பட்டது. 17-9-1918- இல் நாடார்கள் கோவிலுக்குள் நுழைவதை எதிர்த்து மறவர்கள் பெரும் கலகம் செய்தனர். அது முதல் கோட்டையருகே ஆயுதம் தாங்கிய போலீசுப் படை இருந்து வருகிறது. நாடார்களுக்குரிய மாரியம்மன் கோவிலும், கிறித் தவர்களுக்குரிய தேவாலயமும் உள்ளன. சந்தை செவ்வாய்க் கிழமை. முக்கிய வியாபாரம் பருத்தி.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/314
Appearance