335 நாட்டரையூர் என்று இப்பகுதியில் ஒரு ஊர் இருக் கிறது என்று கேள்வி. முத்தரையர் போன்று நாட்டரை யரும் சமூகத் தலைவர்களாக இருந்திருக்கக்கூடும்: அரையர் வாழ்ந்த ஊர்களில் குடவோலை முறை நிலவியது. மாறாந்தை: மாறன் என்பது பாண்டிய அரசர்க்குரிய பெயர்களுள் ஒன்று. ஆதன் தந்தை என்பது ஆந்தை என்றாற்போல. மாறன் தந்தை மாறாந்தை ஆயிற்று. நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டம் ஆலங்குளம் பகுதியிலும் மாறாந்தை என்ற பெயருடன் ஓர் ஊர் திகழ்கிறது. பாகநேரி: இவ்வொன்றியத்திலுள்ள பெரிய ஊர் களில் இது ஒன்று. அரசியல் விழிப்பு மிக்க ஊர். நாட்டார்களாலும் நகரத்தார்களாலும் புகழ்பெற்ற ஊர். இவ்வூர்த் தனவைசிய இளைஞர் சங்கத்து நூல் நிலையத்தில் அரியநூல்கள் உள்ளன. இவ்வூர்ச் சிவாலயம் பாண்டியர் காலத்தில் கட்டப்பெற்ற பெருமை உடையது. இவ்வூரார் பலர் இந்த ஒன்றியத்தின் தலைவராகவும், சட்டமன்றம் - மேலவை உறுப்பினர்களாகவும் இருந் திருக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த திரு.ஆர்.வி.சுவாமிநாதன், எம்.பி. வூரினர். இவ் ஏரி என்னும் ஈற்றுச் சொல்லுடைய ஊர்கள் தமிழ் நாட்டின் வடபகுதியில் மிகுதி. அருமையாக இம் மாவட்டத்தில் இவ்வூர்ப் பெயரில் அச்சொல்லைக் காணு கிறோம். ஊரணி, கண்மாய் என்ற ஈற்றுச் சொற்களே இம்மாவட்டத்தில் வழக்கு.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/337
Appearance