உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 குறிப்பிடத்தக்க ஊர்ப்பெயர்கள்:-ஆக்கவயல், அளவிடங் கான், ஆதிமதுரை, கலைக்குளம், கலங்காதான் கோட்டை,முனைவென்றி, மிருதங்க நல்லூர், புலியூர், சமுத்திரம், திருவள்ளூர்,வாணி. இளையான்குடி: பரமக்குடியிவிருந்து 11கிமீ. தொலைவு தொழில் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் உடைய பேரூர். பெரிய கண்மாய் உளது. நெல் இருபோகம் விளை கிறது. வெற்றிலைக் கொடிக்கால் மிகுதி. மணிபர்ஸ், கோரம்பாய், கான்வாஸ் பைகள் ஆகியவை இங்கு செய்யப்படுகின்றன ஹிந்துக்கள், கிறித்தவர்கள், செல்வம் நிறைந்த முஸ்லிம்கள் ஆகியோர் இங்கு வாழ் கின்றனர். இங்கு இருப்பவை - தெய்வ புஷ்கரணி ஊரணி, வரிசை முகமது ஊரணி, கூட்டுறவு பேங்கு. ஆறு நூல்நிலையங்கள் கால்பந்து விளையாட்டத்தில் வல்லவர்கள், இரண்டு சிவன் கோவில்கள், இரண்டு பெருமாள் கோவில்கள்,நான்கு பள்ளி வாசல்கள், ஒரு தேவாலயம், வாள்மேல் நடந்த அம்மன் கோவில்; வெள்ளிக்கிழமைகளில் பூசை நடைபெறும் அமணசாமி என்ற சமணத்திருவுருவம். . இளையான்குடி என்பது இளையான் என்னும் பெயர் கொண்டுள்ள குடி என்று பொருள்படும். இளையான் குடியை இளையான்றன் குடி என்றும் வழங்குவது உண்டு. 'இளையான்றன் குடி மாறனடியார்க்கும் அடியேன் என்ற சொற்றொடர் இதனை உறுதிப்படுத்தும். இறைவழிபாட்டில் சிறந்த நாயன்மாரில் ஒருவர் இளையான்குடி மாற நாயன்மார். திடீரென்று இவர் இல்லத்துக்கு. தவவேடத்தில் இறைவன் வந்தார். இறைவனுக்கு அமுது படைக்க. வயலிலே அன்று .