870 பெற்றது. 'கரளி ஒட்டக் கூத்தன்' என்ற வழக்கும் உண்டு பேரளம் (தஞ்சை மாவட்டம்) அருகே மலரி என்ற ஊர் உளது. மணக்குடி: உப்பூருக்கு வடக்கே ஊர். இப்பகுதி அளநாடு எனப்பட்டது. உப்பளமுடைய அளநாட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும் பல அளங்களிருந்ததால், இது இடையளநாடு என்று வழங்கப் பெற்றது. இவ்வொன்றியத்தில் கூடலூர், செங்குடி, திருப் பாலைக்குடி என்னும் ஊர்களும் உள்ளன. கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் இவ்வொன்றியம் தேவகோட்டைக்கும் தஞ்சை மாவட்டத்தின் எல்லையிலுள்ள கடலோரப் பகுதிக்கும் இடைப்பட்டது. உடையார்கள் இங்கு ஒரு முக்கிய மான சமூகம். அவர்கள் கத்தோலிக்கர். உஞ்சளை, கட்டிவயல், களத்தூர் நிலமழகிய மங்களம் என்னும் ஊர்ப் பெயர்கள் குறிப்பிடத்தக்கன. கண்டியூர் என்னும் ஊருக்கும் ஈழநாட்டுக் கண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது ஆராய்தற்குரியது. அனுமந்தக்குடி: தேவகோட்டையிலிருந்து 8 கி.மீ. சமணர் கோவில் இன்றும் இருக்கிறது. இவ்வூர் ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. வட்டத் தலைநகராக வும் விளங்கியது. ஓரியூர்: இவ்வூர் திருவாடானையிலிருந்து 16 கி. மீ. தொலைவில் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மீ. தொலை வில் கடல் உளது. . திருவாசகத்தில் இவ்வூர் குறிப்பிடப் பெறுகிறது. திருவிளையாடல் ஒன்று நிகழ்ந்ததாகத் திருவிளையாடற்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/372
Appearance