உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

487 சயனர் கோயில் கல்வெட்டில் மல்லிப் புத்தூர் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. ஆடு மாடு மேய்ப்பவர்கள் அமைத்துக் கொண்ட புதிய ஊர் வல்லிபுத்தூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார். வில்லியர் என்ற கூட்டத்தார் சங்ககாலத் தமிழகத் தில் வாழ்ந்தனர். அவர்கள் தங்கிய காரணத்தால் அவர் கள் பெயர் பெற்ற வில்லியனூர் (புதுச்சேரி), வில்லி வாக்கம் (செங்கற்பட்டு மாவட்டம்)போல இவ்வூரும் பெயர் பெற்றிருக்கலாம். நான்மறைகளும் ஓதக்கூடிய அந்தணரைக் குடி யேற்றிய ஸ்ரீ வல்லப பாண்டியன் என்ற பாண்டிய அரசன் பெயரை இவ்வூர் பெற்றதாகவும் ஒரு சாரார் கூறுவர். மல்லியில் ஆண்ட வில்லி என்னும் வேடுவர் தலைவன் அமைத்த நகர் என்றும் சிலர் கருதுவர். புத்து ஊர் என்பதற்கு எறும்புப் புத்து இருந்த ஊர் என்று காரணம் கூறுவாரும் உளர். இதற்கு ஆதாரமாக ஸ்ரீ வில்லிபுத்தூர் காடா இருந்ததாயும் அங்கு வேட்டையாடிய கண்டன் புலியடித்து இறந்ததாயும் அவன்சவத்தை எறும்புப் புத்துக்களின் வழியாகத் தடம் கண்டு, பார்த்தனர் என்றும் கூறுவர். கோயில்கள்: நாச்சியார் கோயில், வடபத்ரசயனர் கோயில், வைத்தியநாத சுவாமி கோயில் என்ற முப் பெரும் கோயில்கள் இங்கு உள்ளன. நாச்சியார் கோயில்: திருப்பாவை முழுவதும் இக் கோயிலில் எழுதப்பட்டிருக்கிறது. 108 வைணவ தலங் களிலும் நின்றும் இருந்தும் கிடந்தும் உள்ள இறைவர்