471 மேலாமத்தூர்: சிவகாசி-விருதுநகர்ச் சாலையிலுள்ள ஆமத்தூர்க்கு மேற்கே இருப்பதால் இவ்வாறு பெயர் பெற்றது. சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் 1957 முதல் அரசினர் இப்பகுதியின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வொன்றியத்தைச் சூழ்ந்து இம்மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களும் நெல்லை மாவட்டத்துப் புதூர், விளாத்திகுளம். கோயில் பட்டி ஒன்றியங்களும் உள். கோயில்பட்டி நகரோரத் திலுள்ள அரசினர் வேளாண்மைப் பண்ணைவரை இவ் வொன்றியம் பரவியுள்ளது. விருதுநகர் - கோயில்பட்டி இரயில்பாதை இவ் வழியே செல்லுகிறது. இப்பாதைக்கு மேற்கே ஒரு பங்கும் கிழக்கே இரண்டு பங்குமாக, ஒன்றியத்தின் பரப்பு உளது. நள்ளியில் இரயில்நிலையம் இருக்கிறது; கஞ்சம்பட்டியில் இரயில்நிலையம் ஏற்படக்கூடும். களிமண்களால் வெடிப்பு ஏற்படுவதால் கட்டிடங் கள் சுட்ட அடித்தளத்திற்குப் பெரும்பணம் செலவிட வேண்டியதிருக்கிறது. கொல்லம்பட்டியிலும் நென்மேனியிலும் முசுலிம்கள் வாழ்கின்றனர். பெத்துரெட்டிபட்டி, யோத்துரெட்டிய பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி என்பன ரெட்டியார் நாயக்கமாரும் களும் தொகுப்பாக வாழ்வதைக் குறிப்பன. பெரிய கொல்லப்பட்டியிலும் நடுச்சூரங்குடி யிலும் கைத்தறி நெசவுத் தொழில் ஏற்றம் பெற்றிருக் கிறது. முக்கிய பயிர், பருத்தி. பருத்தியுடன் சேர்ந்து ஒரு சால் உளுந்து போடுகிறார்கள். மல்லி, இங்கு பரவ
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/473
Appearance