இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
544 (வேறு) விடுதலைக்கு விதைவிதைத்து வெள்ளைமேனிக் கொக்குகள் வெடவெடக்கக் கலைகொடுத்த விஸ்வநாத தாசனும் இடிமுழக்கம் எங்கள் சிங்கம் முத்துராம லிங்கமும் கொடைகொடுக்க வள்ளல் காரைக் குடிகொடுத்த அழ கனும் நாடுபோற்ற வாழ்வதெல்லாம் நானுரைக்க நாவிலேன்! தேடிநின்ற பதவி தன்னைத் திரணமென்ற தியாகியாய் கோடிகோடி மக்கள் நெஞ்சில் குடிமை கொண்ட காமராஜ் ஈடிலாத எங்கள் செல்வன்; இந்தியாவின் செல்வமே! செட்டிநாட்டுச் செந்தமிழும் சிவகாசிக் கைத்தொழிலும் திட்டமிட்டுத் தொழில்வளர்க்கும் திறன்மிக்க பாளையத்தார் வட்டியிட்டுத் தமிழ் வளர்த்த வளமிக்க பரம்பரையின் பட்டியலும் நீட்டியிங்கே பாடுதற்கு நேரமில்லை! தெருவெல்லாம் தமிழ்முழங்கத் தித்திக்கப் பாட்டெழுதித் தருமெங்கள் கவி கண்ண தாசனுக்கு நிகருண்டோ?