உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பெட்ரோலியத் தொழில் சிறிதளவு உள்ளது. காசாபிளான்காவில் பெரியதொரு இரசாயனத் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறது. ஆலை அமைக்க ஏற்பாடு நடைபெறுகிறது. புவியியல் வளம் எஃகு இந்த நாட்டின் பெரிய புவியியல் பொருள் பாஸ்பேட்டு. நிலக்கரி, கோபால்டு, மங்கனீசு, மாலிப்டெனன், இரும்புத் தாது, ஈயம், துத்தநாகம் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. போக்கு வாத்து ஆகாயவிமானப் போக்கு வரத்து இந்த நாட்டில் பெருமுன்னேற்றம் அடைந்திருக்கிறது. வானொலி நிலையங்களும் தொலைக் காட்சி நிலையங் களும் ஐரோப்பிய நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இவை தனியாரால் தொடங்கப்பட்டவை. இவற்றை இப்போது அரசினர் நடத்திவருகின்றனர். இயற்கை நிலை இயற்கை நிலையால் மொராக்கோ மூன்று பகுதி களாக உள்ளது. 1. மத்தியதரைக் கடலோரத்திலுள்ள செழிப்பான பகுதி. 2. அட்லாஸ் மலைகளுக்கிடை யே யுள்ள வளம் சார்ந்த பள்ளத்தாக்குப் பகுதிகள். 3. சஹாராவுக்கு அருகே உள்ள பாலைவனப் பகுதி. 138 அக்டோபர், நவம்பர், ஏப்ரல், மே மாதங்கள் மழைக்காலம். வடமேற்குப் பகுதியில் மிகுதியான மழை பெய்கிறது.