உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 படையில் அந்தந்த மாநிலத்துக்கேற்ப மாநிலக் கட்சிகளாக மட்டுமே இயங்குகின்றன. வாய்க்கால் வெட்டவும், சாலை போடவும் ஒரு லட்சம் பேர் கொண்ட சீரணிப் படையை அரசினர் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களுடைய விருப்பத்திற்கேற்ப, சுல்தான் இந்த நாட்டின் தலைவராயிருக்கிறார். விடுதலை இயக்கத் தலைவராகவும் இவர் இருந்தார். மொராக்கோ நாட்டில் இஸ்லாமிய சமயத் தலைவராகவும் இவரே விளங்குகிறார். போர்ப்படைத் தலைமைத் தளபதியும் இவரே யாவார். சட்டங்களை நிறைவேற்ற நாடாளு மன்றத்திற்கு உரிமை உண்டு. ஆனால் மன்னராகிய சுல்தான் விரும்பினால் தான் சட்டங்கள் செயல்படும். இந்த நாட்டிற்குச் சில பெருமைகள் உண்டு. இந்த நாட்டின் படை ஆப்பிரிக்காவிலேயே குறிப்பிடத்தக்க படைகளுள் ஒன்று. 1912 ஆம் ஆண்டில் தான் இந்த நாடு முழுவதும் பிரெஞ்சுக்காரருக்கு அடிமைப்பட்டது. அதற்கு முந்தின, 1200 ஆண்டுகளில் நாட்டின் சில பகுதிகள் அயலவருக்கு அடிமைப்பட்டிருந்த போதும் நாடு முழுவதும் ஒரு போதும் சுதந்திரத்தை இழக்கவில்லை. ஆகையால், அயலவர் ஆட்சி காணா நாடு என்ற சிறப்பு மொராக்கோவுக்கு இருந்தது. அமெரிக்காவின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடு மொராக்கோ தான். அமெரிக்க அரசாங்கம் முதல் தடவையாக வெளிநாடுகளில் தூதுவர் அலு வலகம் திறந்தது, மொராக்கோ நாட்டில் தான். Voice of America என்ற வானொலி நிலையத்துக்கு மொராக்கோவில் பெரியதொரு ஒலி பெருக்கி நிலையம் இருக்கிறது.