உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 21 சரீரத்தின்மீது தாவியது. சதையைக் கருக்கியது. எலும்பை உருக்கியது. ஆனால் அவர்கள் கொள்கை கள் தணலிலே வெந்த தங்கமாயின. ஏன், இத்தனை கஷ்டமடைந்தார்கள்... அவதி யை வலுவிலே ஏன் அணைத்துக்கொண்டார்கள்.... தாங்கள் மன்னர்களாகவா? அல்லது மடத்தலைவர் களாகவா? மாணிக்க ஊஞ்சலிலே மரகதக் கட்டி லிலே மயில் ஆசனத்திலே மந்தகாசர்களாய் அமர்ந்து மகிழ்ச்சிக்கூத்து ஆடவா? அப்படி நினைத்திருந்தால் அவர்கள் கையிலே சிலுவையோ- விபூதியோ -அல்லவா காட்சியளித்திருக்கும். அவர் கள் கரங்களில் இருந்தது அறிவு நூல்கள் தானே! அந்தஸ்தை விரும்பியிருந்தால் ஆண்டவன்-ஆண்ட வனின் கதை- ஆண்டவனின் அற்புதம் இப்படியல் லவா காலக்ஷேபம் நடத்தியிருப்பார்கள். அவர்கள் விரும்பியது; மதத்தை மண்ணாக்கி, மடத்தனத்தை அழித்தது. மக் கள் சமுதாயத்தைப் புதுமைச் சோலையாக்க வேண்டுமென்பதுதான். தாங்கள் அடியெடுத்து வைக்கும் புரட்சிப் பாதை பயங்கரம் நிறைந்தது என்பது அவர்கட்குத் தெரியும். தெரிந் தும் தைரியமாகக் கிளம்பினார்கள். தாங்கள் அழிக் கப்பட்டாலும் தங்கள் கொள்கைகள் அழிக்கப்பட முடியாத நிலையை அடைந்தார்கள். நம் நாட்டிலே மட்டுமல்ல - நானிலமெங்கணு மே ஆயிரக்கணக்கான வருட ங்களுக்கு முன்பிருந் நிலைமை தே நாகரீகம் அரும்பக்கூட முடியாத இருந்திருக்கிறது. மேல் நாடுகளிலே இருந்த மத நம்பிக்கை நம்மைவிட மட்டமானது. அங்கே யிருந்த கடவுள்கள் நமக்கிருப்பதைவிட தொகை யிலே அதிகமானவர்கள். அங்கேயிருந்த குருக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/22&oldid=1688662" இலிருந்து மீள்விக்கப்பட்டது