இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
அடிகளாசிரியர்
34.எது வேண்டும்?
கூற்று கற்ற அண்ணனும், கற்குந் தம்பியும்
சுவை: உவகை
1. அன்பு வேண்டுமா? தம்பீ!
அழகு வேண்டுமா?
அன்பைப் பெற்றால் அழகு வரும்
அன்பு வேண்டுமே;அகத்தில்
அன்பு வேண்டுமே.
2. ஊக்கம் வேண்டுமா? தம்பீ!
உடைமை வேண்டுமா?
ஊக்கம் பெற்றால் உடைமை வரும்
ஊக்கம் வேண்டுமே; அகத்தில்
ஊக்கம் வேண்டுமே.
3.கல்வி வேண்டுமா? தம்பீ!
செல்வம் வேண்டுமா?
கல்வி பெற்றால் செல்வம் வரும்
கல்வி வேண்டுமே; மனதில்
கல்வி வேண்டுமே.