உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 நாடாளுமன்றத்தில் அண்ணா முழக்கம் "அவசர கால நிலையையும் ரத்து செய்யாமல், பாதுகாப்புச் சட்டங்களையும் பயன்படுத்திக் கொண்டு, ஜனநாயகத்தைப் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதியே இல்லை" என்று 1966 ல் அண்ணா, மாநிலங்கள் அவையில் குரல் எழுப்பிய போது அலட்சியமாக அமர்ந்திருந்த அதே இந்திரா காந்திதான், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களின் உரிமைகள் அனைத்தையும் உடைத்தெறிகிற பயங்கரமான அவசரகாலச் சட்டத்தைப் 'பிரகடனப் படுத்தினார். அண்ணாவின் அணியில் இருந்திடுவோர் அந்தச் சட்டத்தை எதிர்த்ததில் வியப்பில்லை. எதிர்க்காது விட்டிருந்தால்தான் இவர்கள் அண்ணா வழியில் நடப்பவர் களா என்று நாடு நகைத்திருக்கும். ஜனநாயகம் ஒரு வாழ்க்கை நெறி "ஜனநாயகம், ஒரு அரசியல் தத்துவம் மட்டுமல்ல; அது வாழ்க்கை நெறியும் கூட" என்பது அண்ணாவின் பொன்மொழியாகும். இந்தியா, விடுதலை பெற்ற பிறகு மத்திய அரசிலும்-மாநில அரசிலும் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வருவது ஆரோக்கியமான ஜன நாயகத்திற்கு வழிவகுக்காது என்ற குரல் தமிழ் நாட்டில் ஓங்கி ஒலித்தது. மத்தியிலே அந்த மாற்றத்தை உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும், மாநிலங்களிலே அந்தமாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்று தி. மு. க. கருதியது.