________________
18 பெருமை தன்மான இயக்கத்திற்கு, திராவிட இயக்கத் திற்கு உண்டு. விவாக-சுப முகூர்த்தங்கள், திருமண விழாக்களாக மாறின. ஓம குண்டங்களுக்குப் பதில் ஒலிப்பெருக்கிகளும், அம்மி, அரசாணிக்குப் பதில் மேசை நாற்காலியும், அய்யருக்கு பதில் மணவிழாத் தலைவரும், வட மொழியில் கூறப்பட்ட புரியாத மந்திரங்களுக்குப் பதில் தமிழில் வாழ்த்து முழக்கங்களும் சுயமரியாதைத் திருமண முறை யில் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திருமணங்கள், சட்ட சம்மதம் பெற்றவைகளாக அமைதல் வேண்டுமென்று நீண்டகாலம் போராடி, இறுதியாக அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த போது, கழக ஆட்சியில் சுயமரி யாதைத் திருமணங்கள், சட்டப்படி செல்லும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. இரண்டே ஆண்டுக் காலம் தான் அண்ணா ஆட்சிப் பொறுப்பில் இருந்தார் என்றாலும், பிரிவினைக் கொள் கையைக் கைவிட்டு விட்ட தி.மு. கழகம், இந்திய அரசியல் அமைப்புக்குள் மாநிலங்களின் முழுமையான சுயாட்சிக்காகப் பணிபுரியும் என்பதை முதலமைச்சராக இருந்து கொண்டே அறிவித்தார். மாநில சுயாட்சிக் கோரிக்கை அண்ணாவின் வழிநின்று, மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து அறிக்கை தர இராஜமன்னார், சந்திராரெட்டி எனும் இரண்டு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை யும், பல ஆண்டுக் காலம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரையும் கொண்ட ஒரு குழுவைக் கழக அரசு அமைத்தது.