உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 தமிழகம்' எனும் நூலை வெளியிட்டது. தமிழ் மொழி, கலை, இலக்கியம், வரலாறு இவற்றினைக் காத்திடக் கழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், தமிழ் உணர்வு தழைப்பதும் உலகின் பல பகுதிகளில் வாழுகிற சுமார் மூன்று கோடித் தமிழர்களும்-நான்கு கோடித் தமிழர் கள் வாழுகின்ற தமிழ்த் தாயகம் தன்னை அன்புடன் போற்றுவதும், ஒரு சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. அந்த "வெறுப்பு-நெருப்பு” தமிழகத்திலேயுள்ள ஒரு பிரிவினருக்கும் அவர்தம் உள்ளத்தில் வேகமாகவே பற்றி எரிந்தது. தமிழ் உணர்வு தழைக்கச் செய்தது மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அடித்தளத்துச் சாமான்ய மக்களுக்கும் - நடுத்தர வர்க்கத்தினருக்கும் கழக அரசின் சாதனைகள் தமிழ் நாட்டில் பூத்துக் குலுங்கின. பிற மாநிலங்கட்கு வழிக்காட்டியாகத் தமிழகம்! அத்தகைய சாதனைகளில் இந்தியாவில் தமிழ்நாடே பிறமாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது என்று நெஞ்சுயர்த்திக் கூறமுடியும். நகரங்களில் உள்ள குடிசைகளை, கல் கட்டிடங்களாக மாற்றி அமைக்கும் குடிசை பணி. கட்டித் தரும் தீவிரத்திட்டம். மாற்று வாரியத்தின் ‘காங்க்ரீட்” வீடு அரிஜனங்களுக்கு இலவசமாக அவ்வாறே மீனவர்களுக்கும் இலவச வீடு கட்டி வழங்கும் திட்டம்,