________________
"தி.மு.க. அரசு காந்திய வழியில் நடைபோடுகிறது. என்று பாராட்டினார். அன்று மாலை ‘டான் பாஸ்கோ' பள்ளியின் விழாவில் நான் கலந்து கொண்டேன். என் மனத்தில் ஏற்பட்டிருந்த ஐயப்பாட்டின் காரணமாக, அந்த விழாவில் நான் பேசத் தொடங்கியபோது, 'இது முதல்வர் என்ற முறையில் நான் கலந்து கொள்ளும் கடைசி விழாவாக இருக்கக் கூடும்' என்று குறிப்பிட்டேன். கூடியிருந்தோர் வியப்புற் றனர். விழாமுடிந்து வீட்டுக்குத் திரும்பினேன். ஆட்சி க்லைக் கப்பட்டுவிட்டது, என்ற செய்தியை - செய்தி நிறுவனம் அறிவித்தது.நான் வீட்டுப் படிக்கட்டு ஏறியபோது இந்தச் செய்தியை சிரித்துக்கொண்டே என் வீட்டார் கூறினார் கள். 'அப்படியா?' என்று மகிழ்ச்சியுடன் மாடிக்குச் சென் றேன். தொலைபேசி மூலம் மற்ற அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள முயன்றேன். தொலைபேசித் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. மாடியிலிருந்து கீழே இறங்கினேன். வீட்டுக் காவலுக்கு இருந்தபோலீசார் என்னிடம் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள். நான் பயன்படுத்தி வந்த அரசாங்க்க்காரை உடனடியாகத் தலைமைச் செயலகத்துக்குத் திருப்பி அனுப்பி வைத்தேன். வீட்டில் கழகத் தலைவர்களும், முன்னணியினரும் பொது மக்களுமாகப் பெருங்கூட்டம் கூடிவிட்டது. கண்ணீர்விட்டனர் கதறினர்! கனல் கக்கினர்! அண்ணா வழியில் அமைதி காக்க வேண்டும் என்பது தான் அன்றைக்கு நான் விடுத்த வேண்டுகோள். சில மணி நேரத்திற்கெல்லாம் வீட்டுக்குப் போலீசார் வந்தனர். 'என்ன கைது செய்ய வந்துள்ளீர்களா? வரட் டுமா?' என்று கேட்டேன், D