உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காமராசரை அவமதித்த இந்திரா 1972-ம் ஆண்டில் கன்யாகுமரியில் ரயில்பாதை அடிக் கல் நாட்டுவிழா என் தலைமையில் நடைபெறுகிறது. இந்திராகாந்தி அந்த விழாவில் அடிக்கல் நாட்டுகிறார். அது மத்திய அரசு நடத்துகிற விழா. அந்தப் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் காமராசரும் அந்த விழாவுக்கு வந்திருக்கிறார். அவருக்கு மேடையில் கடைசி நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அவரைப் பார்த்து இந்திராகாந்தி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. விழா முடிந்து மேடையிலிருந்து இறங்கும்போது பெருந் தலைவர் காமராசர் பிரதமர் இந்திராவுக்கு வணக்கம் செலுத்துகிறார். அதற்குப் பதில் வணக்கம்கூட செலுத்தா மல் மேடையைவிட்டு அந்த அம்மையார் இறங்கிவிடு கிறார். என் மனம் படாதபாடு படுகிறது. நான் பெருந் தலைவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு நலம் கிறேன். இது குமரிமுனையில் நடந்த நிகழ்ச்சி. விசாரிக் அவ்வாறு இந்திராவினால் அலட்சியப்படுத்தப்பட்ட காமராசர் மறைந்ததும், இந்திராவின் வருகை இயற்கை யானதாக அமையவில்லை. தன்னுடைய ஆருயிர் நண்பர் மறைவுக்கு வரமுடி யாத அளவுக்கு நீலம் சஞ்சீவரெட்டியார் கஷ்டப்பட்ட தும், பிறகு கழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால்தான் ரெட்டியார் காமராசரின் இறுதி யாத்திரைக்கு வரமுடிந் தது என்பதும், நீலம் சஞ்சீவ ரெட்டியார், குடியரசுத் தலைவரான பிறகு அவரே வெளிப்படையாகக் கூறிய செய்தியாகும். ஏன் அந்த நிலை? அவசரகாலச் சட்டத்தால் சஞ்சீவரெட்டி போன்ற வர்கள் ஒரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்குச் செல்வது கூட அவ்வளவு சிரமத்திற்குரியதாக் இருந்தது.