உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 மானாலும் செய்யலாம், யாரையும் எப்படியும் ஆட்டிப் படைக்கலாம் என்று எண்ணிக் கொண்டுதான் டில்லி யிலே இருக்கின்ற பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், எதையும் தன் இஷ்டப்படி செய்யலாம் என்று வந்திருக்கிறார்கள். ஆனால் அவர் இஷ்டப்படி எதையும் செய்துவிட முடியாது என்று ஆந்திராவில் அணையிட்டு தடுத்து இருக்கிறோம். அந்த வெற்றிச் செய்தியைத்தான் காலை யிலே மாநாட்டு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சியோடு தெரிவித்தார். அந்தச் செய்தியை தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி நேற்று பேசும்போது, ஒன்றை குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து மாநாட்டு திறப்பாளரும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து நாஞ்சிலாரும் பேசினார், அதனைத் தொடர்ந்து நம்முடைய பேராசிரியரும் குறிப்பிட்டார். இந்தியாவிலே இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி அமைப்புமுறை- ஜனநாயகமுறை மாற்றப்பட்டு, ஜனா திபதி ஆட்சிமுறை - ஜனாதிபதி ஆட்சிமுறை என்றால், டெல்லிப் பட்டணத்திலே இருக்கின்ற பெரிய கட்டிடத் திலே அமர்ந்து ஜெயில்சிங் மத்திய அரசின் பாவையாக இருக்கின்றாரே அதுபோல அல்ல!. கைப் இலங்கையில் ஜெயவர்த்தனே இருக்கிறாரே, அது போன்ற ஜனாதிபதியாக, இங்கே இந்திராகாந்தி ஆளத் துடிக்கிறார். இப்போது ஜனாதிபதி ஆட்சி முறை வரு வதால், ஜனநாயகத்திற்கு ஆபத்து வராது சொல்லுகிறார்கள். என்று புலி பாய்வதால் குழந்தையின் உடம்பிலே காயம் ஏற்படாது என்று சொன்னால் அது எப்படி, பைத்தியக் காரத்தனமோ-,