உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 105 என்பதாக, கவி. செரீப்பு எழுதியுள்ளதை நானும் 1961 பிப்ரவரி 24 சட்டசபை நடவடிக்கைப் புத்தகத்தில் தேடித் தேடிப் பார்க்கிறேன் என் கண்ணுக்குத் தென்படவே இல்லை. BlTe அண்டப் புளுகர்-ஆகாயப் புளுகர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களையெல்லாம் நேரிலே காண்பதென்றால் "சத்திய மூர்த்தி பவன"த்திற்குத்தான் செல்ல வேண்டும் போலிருக்கிறது. 6 6 "மெட்ராஸ் ஸ்டேட்டை" "தமிழ் நாடு" என்று மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல; பம்பாய் மாநிலத்தை மராட்டியம் என்று அவர்கள் மொழிப் பற் றோடு மாற்றிக்கொண்டதைக் கூட அன்றையதினம் அமைச்சர் சுப்பிரமணியம் தவறு என்று குறிப்பிட்டார். "மகாராஷ்டிரா என் என்று சொல்லிக் காட்டி, நாமும் அதற்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. மகாராஷ் டிரா என்று வைத்திருப்பது கூடச் சரியல்ல என்பது என் சொந்த அபிப்பிராயம்." ய 125 1961 பிப்ரவரி 24 ஆம் நாள் சட்டசபையில் சுப்பிரமணி யம் திருவாய் மலர்ந்தருளிய வாசகம்தான் நண்பா; இதுவும்! (பக்கம் 480 சட்டசபை நடவடிக்கைப் புத்தகம்) அதாவது; தன்னைப்போலவே மராட்டிய மண்டலாதிபதி களும் உணர்ச்சியற்றவர்களாக இருக்க வேண்டும்- அல்லது மக்களின் விருப்பத்தைக் குப்பைக்கூடையில் அள்ளிப் போடும் மமதையாளர்களாக இருக்க வேண்டு மென்று அவர் எதிர்பார்த்தார். இந்த ஆண்வப்போக்கு-அலட்சிய மனப்பான்மை- சர்வாதிகார நடத்தை - அனைத்தையும் மறைத்துவிட்டு க8.